கேரள மாணவியின் படிப்புக்கு உதவிய அல்லு அர்ஜுன் – கலெக்டர் பாராட்டு

0
20

கேரள மாணவி: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜாவிடம் பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஒருவர், தனக்கு நர்ஸிங்க படிப்பில் ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் படிப்பதற்கு வசதி இல்லை என்றும் தெரிவித்தார். மருத்துவம் படிக்கும் அளவுக்கு மதிப்பெண்கள் இருந்தும் நர்சிங் படிக்க விரும்பும் மாணவியின் ஆர்வத்தை புரிந்துகொண்ட கலெக்டர் ‘ஆலப்பி புராஜக்ட்’ திட்டத்தின் மூலம் அவருக்கு உதவி செய்ய முன் வந்தார்.

allu arjun sponsors a kerala girl for her education

பிறகு ஒரு தனியார் கல்லூரி அந்த மாணவிக்கு இடம் கொடுத்தது. கல்லூரி கட்டணத்தை யார் கட்டுவது என்ற சூழ்நிலையில் கலெக்டர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இது குறித்து இமெயில் மூலமாக தகவல் தெரிவித்தார். இதையறிந்த அல்லு அர்ஜுன் மாணவியின் 4 ஆண்டுகளுக்கான படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக பதிலளித்தார். இத்தகவலை கலெக்டர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அல்லு அர்ஜுனைப் பாராட்டியுள்ளார். அல்லு அர்ஜுனின் இந்த செயல் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here