காடவர் படத்தில் தடயவியல் நிபுணராக அமலா பால் களமிறங்கி உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாகவே சினிமாவிலிருந்து வெளியில் இருந்து வந்த அமலா பால் (AMALA PAUL) காடவர் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகு மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் அமலா பால். தமிழில் முக்கிய நட்சத்திரங்களுடனும் நடித்து பெயர் பெற்றவர். கடைசியாக ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக ஓரு காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் ஓரு சில படங்கள் தோல்வியை தழுவியது.
அதன் பின் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கணவருடன் விவாகரத்து தந்தை இறப்பு என பல இன்னல்களை கண்டு மிரண்டு போன அமலா பால் திரை உலத்தை விட்டு வெளியேறினார். ஆனாலும் இன்ஸ்டாவில் மட்டும் படு ஆக்டிவாக இருந்து வந்தார். பின் காடவர் திரைப்படத்தை பற்றி பேசிய இயக்குனரிடம் நடிக்க ஓப்புக் கொண்டார். தயாரிப்பாளர் இன்றி தவித்த போது தயாரிப்பாளராகவும் அமலா பால் தயாரிப்புக்கு ஓப்புக் கொண்டார்.

இந்நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம் என 8 மொழிகளில் வெளியாகியது. டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் ஓடிடி தளத்தில் ஓளிபரப்பாகி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாள இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் கடாவர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஹரிஸ் உத்தமன், முனீஷ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகரர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதியிருக்கிறார். ரஞ்சின் ராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அரவிந்த் சிங் இசையமைத்துள்ளார்.