அமலா பால் நடித்த ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

0
4

அமலா பால் நடித்த ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகம் மட்டும் அல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிரபலமாக நடித்து வந்தவர் அமலா பால். கடந்த 4 வருடங்களாக நடிப்பிற்கு வராமல் சமூக வலைதளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்தார்.

தமிழ் திரைப்படத்திற்கு மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னனி கதாநாயகர்களோடு கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். பல வெற்றி படங்களில் நடித்தவர் பின் பல தோல்வி படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில், இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல’. இந்த படத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அமலா பால் நடித்த ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத். பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் ‘அதோ அந்த பறவை போல’ படம் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here