அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை நிறைவு பெற்றது

0
15

அமர்நாத் குகை கோயில் பனிலிங்க தரிசன யாத்திரை நேற்றோடு நிறைவு பெற்றது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத்தில் குடைவரை கோயில் உள்ளது. இதில் பனிலிங்க தரிசனம் உலகம் முழவதும் பிரசிதிப் பெற்றது. இந்த பனிலிங்கத்தை தரிசனம் மேற்கொள்ள ஓவ்வோரு ஆண்டும் 40 நாட்கள் அல்லது 45 நாட்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி இவ்வாண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு ஜீன் 30 முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த யாத்திரை சரியாக 43 நாட்கள் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய புனித தலமாக கருதப்படும் அமர்நாத் குகை, லிட்டர் பள்ளத்தாக்கில் இருந்து 12 ஆயிரத்து 756 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இங்கு உருவாகும் பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படும் இக்குகைக்கு செல்ல கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை காண முன்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி முதல் தொடங்கியது.

அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை நிறைவு பெற்றது

இதை தொடர்ந்து ஜூன் 30ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கி நிலையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை யாத்திரை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் மேகவெடிப்பு காரணமாக கனமழை ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு உண்டானதால் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த ஜூன் 30ம் தேதி தொடங்கிய அமர்நாத் குகை கோயில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை நிறைவடைந்தது. 6 லட்சம் முதல் 8 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3.03 பக்தர்கள் மட்டுமே சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 43 நாட்கள் நடைபெற்ற இந்த யாத்திரையானது அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here