இலந்தை பழத்தில் காணப்படும் மருத்துவ குணங்கள்

0
2

இலந்தை பழத்தை அறியாத மனிதர்களே இருக்க மாட்டார்கள் கிராமப் புறங்களில் அன்றாடம் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்கும் அற்புதமான பழமாக இருக்கும் இலந்தை பழத்தில் எண்ணற்ற நன்மைகள் காணப்படுகிறது.

இலந்தை பழமானது அனைத்து நாட்களிலும் கிடைப்பதில்லை அதற்கேற்ற சீசன்களில் மட்டுமே கிடைக்கும் அற்புதமான பழமாகும். இயற்கை கொடுத்த கொடைகளில் இதுவும் ஓன்று. வருடத்தின் இறுதி மாதமான நவம்பர் மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை கிடைக்கும். அதாவது குளிர்காலங்களில் மிகுந்து காணப்படும் இந்த இலந்தை பழம். இதன் பூர்வீகம் சைனவாக காணப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிற்கு வந்துள்ளது.

இலந்தை பழத்தில் சீமை இலந்தை நாட்டு இலந்தை என்று இருவகை காணப்படுகிறது. சீமை இலந்தை என்பது நெல்லிக்காய் அளவில் பெரியதாக காணப்படும். நாட்டு இலந்தை சிறியதாக இருக்கும். இப்படி இருவகைகளில் இலந்தை காணப்பட்டாலும் நன்மை அளிப்பதில் ஓன்றாகவே இருக்கிறது. இலந்தையில் உள்ள நன்மைகளை இந்த பதிவில் மூலம் அறிவோம்.

இலந்தை பழத்தில் காணப்படும் மருத்துவ குணங்கள்

இலந்தை பழத்தில் காணப்படும் மருத்துவ குணங்கள்:

  • இலந்தையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.
  • இலந்தை பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மேலும், இதில் க்ளூடாமிக் அமிலம் இருப்பதால் மூளை சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது.
  • இலந்தையில் வைட்டமின் A சத்தும் அதிகம் காணப்படுகிறது.
  • இலந்தையில் சுண்ணாம்பு சத்து இருப்பதால் பற்கள், எலும்புகள் உறுதி பெறவும் இலந்தை சிறப்பான மருத்துவமாக இருக்கிறது.
  • இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் வல்லவனாக இலந்தை பழம் விளங்குகிறது.
  • இரத்த அழுத்தத்தை குறைக்கவும் இலந்தை பயனுள்ளதாக உள்ளது.
  • செறிமான பிரச்சனைகளையும் நீக்க வல்லதாக இருக்கிறது.
  • பெண்களுக்கு ஏற்படும் மாதவீடாய் பிரச்சனைகளின் போது இலந்தை சாப்பிட்டால் ரத்தப் போக்கு குறைந்து ரத்தம் சுத்தப்படுத்துவதுடன் பலமுடன் இயங்கவும் வழிவகை செய்கிறது.
  • பேருந்து பயணங்களின் போது ஏற்படும் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றிக்கும் சிறந்த நிவாரணமாக அமைகிறது.
  • இலந்தையில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜென்ட்கள் உடலில் உள்ள கோளாறுகளையும், நோய்களை நீக்கவும், நிணநீர் மண்டலத்தின் மீதுள்ள அழுத்தத்தையும் குறைக்கின்றன.

இப்படி இலந்தை பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இயற்கை அளிக்கும் பழங்களில் மனிதனின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது. அதை புரிந்து மனிதன் காடுகளையும் மரங்களையும் வளர்த்து அதோனோடு பயனிக்கவும் அதனை அனுபவிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். இலந்தை பழத்தில் இலந்தை அடை செய்து சாப்பிடுவதை தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.

இதையும் படியுங்கள்: முட்டைக்கோஸின் மருத்துவப் பயன்கள்

இது போன்ற பல தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here