அமிதாப் பச்சனின் 80 வது பிறந்தநாள்; ரசிகர்கள் கொண்டாட்டம்

0
6

அமிதாப் பச்சன்:  1942ம் ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர் அமிதாப் பச்சன். பிரியமாக ரசிகர்கள் இவரை ஷெஹன்சா (மஹாராஜா) என்று அழைக்கின்றனர். இன்று பல கோடிக்கு அதிபராக இருக்கும் இவர் ஆரம்ப காலத்தில் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர். வேலைக்காக மிகவும் கஷ்டப்பட்டவர். வானொலியில் செய்தி வாசிக்க சென்றபோது குரல் சரியில்லை என்று நிராகரிக்கப்பட்டவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் பட நிறுவனங்களுக்கு சென்றபோது, உயரத்தையும் மெல்லிய உடலையும் பார்த்து கிண்டலடிக்கப்பட்டவர். கடும் முயற்சிக்கு பின்னர் பட வாய்ப்பு கிடைத்தாலும், அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ச்சியாக 13 தோல்வி படங்களை கொடுத்து ராசி இல்லாத நடிகர் என விமர்சிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தங்குவதற்கு வீடு கூட இல்லாததால் பாலிவுட் காமெடி நடிகர் மெஹ்மூத்தின் வீட்டில் தங்கியிருந்தார்.

amitabh bhachan 80th birthday

அதன் பின்னர் அவர் ஜன்ஜீர், ஷோலே, ஆமர் அக்பர் அந்தோணி, நஸீப், கூலி போன்ற வெள்ளி விழா படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் ஆனார். சினிமாவில் படிப்படியாக முன்னேறி தேசிய அளவில் பிரபலமானார். அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு 3,500 கோடி என கூறப்படுகிறது. ஆண்டுக்கு 50 கோடி வருவாயாக பெறுகிறார். சினிமாவில் மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர படங்களின் மூலமும் அவருக்கு வருமானம் வருகிறது. சம்பாதிக்கும் பணத்தில் பெரும் தொகையை தர்மத்துக்காகவும் செலவழிக்கிறார். ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தை தேர்வு செய்து விவசாயிகளின் கடன்களை அவர் அடைக்கிறார். இதை பல ஆண்டுகளாக நடைமுறையாக வைத்திருக்கிறார். மாதம் தோறும் சினிமா தொழிலாளர்களுக்கு மளிகை சாமான்கள் வாங்கித் தருகிறார். பலவகையான தொண்டு வேலைகளிலும் ஈடுபடுகிறார்.

நேற்று அவர் தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி வீட்டிற்கு வெளியே காத்திருந்த அவரது இரசிகர்களை சந்தித்து அமிதாப் அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றார். உலகம் முழுவதும் உள்ள அமிதாப் இரசிகர்கள் கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும் அவரது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

அமிதாப் பச்சனின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் ’80 வயதை அடைந்துள்ள வாழும் வரலாறு, இந்திய திரையுலகின் மிகப்பெரும் அடையாளச் சின்னமான அமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களது தனிச்சிறப்புமிக்க கலைப்பண்புகள் இனி வரும் காலங்களிலும் இந்திய திரையுலகில் செல்வாக்கு செலுத்தி, ரசிகர்களை மேலும் பல பத்தாண்டுகள் தன்வயப்படுத்தி மகிழ்வித்திட வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here