பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்த அமுல்

0
14

பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்த அமுல் நிறுவனம் குஜராத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமுல் நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது சுமார் 2.8 மில்லியன் பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் இயங்கி வருகிறது. அமுல் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் “விலை மதிப்பற்றது” என்பது பொருளாகும். இந்நிறுவனம் வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆவின் எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அமுலை முன்மாதிரியாகக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. பால் மூலம் உற்பத்தியாகக் கூடிய அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் அமுல் நிறுவனம் விற்பனை செய்கிறது. பால்,வெண்ணெய், நெய், தயிர் , சாக்லெட்டுகள், ஐஸ் க்ரீம் ஆகியவை அமுல் நிறுவனத்தின் தயாரிப்புகளாகும்.

பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்த அமுல்

இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிலிண்டர், சமயல் சாமான்கள்  என அனைத்து விதமான பொருட்களின் விலையும் அதிகரித்து மக்களின் மீது சுமையை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது பால் விலையும் நாளை முதல் லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்துவதாக அமுல் பால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய விலைப் பட்டியலின்படி, 500 மில்லி அமுல் கோல்ட் பால் இனி ரூ.35-க்கும், அமுல் தாசா ரூ.25-க்கும், அமுல் சக்தி ரூ.28-க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதர் டெய்ரி பாலும் விலையேற்றம்: அமுல் போல் மதர் டெய்ரி என்ற நிறுவனமும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. மதர் டெய்ரி ஃபுல் க்ரீம் பால் ஒரு லிட்டர் இனி ரூ.61-க்கு விற்பனை செய்யப்படும். டோண்ட் பால் ஒரு லிட்டர் ரூ.51-க்கு விற்பனை செய்யப்படும். டபுள் டோண்ட் பால் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும். பால் பூத்களில் விற்பனை செய்யப்படும் பால் லிட்டருக்கு ரூ.48 என்ற விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here