ஆண்ட்ரியா: கடந்த 2017ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது. சமூக அக்கறையை காட்டும் படமாக இந்த படம் அமைந்தது. இந்த படத்தின் மூலம் இந்த படத்தின் இயக்குனர் கோபி நயினார் பெருமளவில் பேசப்பட்டார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘மனுஷி’. இப்படத்தை இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். அதில் அவர் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இப்போது அவர் தயாரிக்கும் படத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் இதில் வெற்றிமாறன், கோபி நயினார் இணைவதால் இந்த படத்திற்கு எதிரபார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆண்ட்ரியா பிறந்தநாளான நேற்று படக்குழு இந்த படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி ‘மனுஷி’ படதத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது