ஏஞ்சலினா: ஐ.நா அகதிகளுக்கான பிரவின் சிறப்பு தூதராக இருந்த பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையின் அகதிகளுக்கான பிரிவின் சிறப்பு தூதராக ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜுலி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது தனது சிறப்பு தூதர் பதவியை ஏஞ்சலினா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அகதிகளுக்கான ஐ.நா ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், ‘உலகம் முழுவதும் இடம் பெயர்ந்த மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக கடந்த 20 ஆண்டுகளாக ஏஞ்சலினா ஜூலி அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார். வரும் ஆண்டுகளில் அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்த மக்களுக்காக தொடர்ந்து ஆதரவளிப்பார்’ என்று கூறினார்.
இது பற்றி ஏஞ்சலினா கூறுகையில், ‘அகதிகள் பிரச்சினை நம் மனதை வெகுவாக பாதிக்கும். நம் மனதை விட்டு நீங்காது. எனது மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து செய்து வருவேன்’ என்று கூறினார்.