பிப்ரவரி 14: ‘Cow Hug Day’ – இந்திய விலங்குகள் நல வாரியம் சுற்றறிக்கை!

0
26

பிப்ரவரி 14: ‘Cow Hug Day’ – இந்திய விலங்குகள் நல வாரியம் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் FEB 14 உலக காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அன்னிய கலாச்சாரத்தால் இளைஞர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இந்தியாவில் FEB 14 பசுவை கட்டிப் படித்தல் நாளாக கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலம் காலமாக பசு வளர்க்கப்பட்டு கடவுளாக வணங்கப்படும் விலங்காக உள்ளது. இந்த பசு தரும் பாலால் நம் உடல் ஆரோக்கியம் அடைகிறது. மேலும், உழவுக்கு உற்ற நண்பனாக இருந்து விவசாயத்தின் முதுகெலும்பாகு உள்ளது. பசுவை யாரும் இன்று மதிப்பதில்லை. எனவே பசுவை மதிக்கும் விதத்திலும் பழைய மரபை மீட்டுக்கும் நோக்கிலும் மேலும், அன்னிய கலாச்சாரத்தை வலுவிழக்க செய்யும் நோக்கிலும் இந்த நாள் கொண்டாட பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14: ‘Cow Hug Day’ – இந்திய விலங்குகள் நல வாரியம் சுற்றறிக்கை!

மனிதர்களுக்கு அனைத்து வித செல்வங்களையும் அளிப்பதோடு தாயை போல ஊட்டமளிக்கும் பாலை கோமாதா தந்து கொண்டு உள்ளது. மேற்கத்திய கலாசார தாக்கத்தால் வேதமரபுகள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய கலாசாரத்தால் நமது கலாசாரம், பாரம்பரியம் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது. பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு ஏற்படும். அதோடு நமக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே அனைவரும் பசுக்களின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற பிப்ரவரி 14ம் தேதியை Cow Hug Day தினமாக கொண்டாட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தனுஷ் குரலில் விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரல்

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here