ரூபாய் நோட்டுகளில் ஓரு புறம் மகாத்மா காந்தி மறுபுறம் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் பதிவிட வேண்டும் என காங்ரஸ் எம்பி மணிஷ் திவாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமத்துவம் பற்றி பேசிய நவீன இந்தியாவின் ஆளூமை அம்பேத்கர், அவர் படத்தை ஏன் ரூபாய் நோட்டுகளில் அச்சிடக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் இனி வரும் புதிய இந்திய ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லஷ்மி தேவி போன்றோரின் கடவுள் புகைப்படங்களை அச்சிட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்திய பொருளாதாரத்திற்கு கடவுளின் ஆசியும் மிக முக்கியம் அப்போது தான் இந்தியா வல்லரசாகவும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் எனவும் கூறி ஓரு புறம் மகாத்மா காந்தி புகைப்படத்தையும் மறுப்புறம் கடவுளின் புகைப்படத்தையும் அச்சிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

உதாரணத்திற்கு இந்தோனிஷியாவை எடுத்து கூறியிருந்தார். நேற்று இது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் தன் எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி புதிதாக அச்சிடபபடும் இந்திய ரூபாய் நோட்டுகளில் சமூக மாற்றத்தின் பிரதிபலிப்பாய் இருந்த நவீன இந்தியாவின் ஆளூமை மிக்கவராக விளங்கிய அம்பேத்கரின் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி முதல்வரை தொடர்ந்து பலரும் தன் கருத்துகளை கூறி இந்திய ரூபாய் நோட்டுகளில் புகைப்படம் அச்சிடுவது குறித்து பேசி பரப்பரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.