அனுஷ்கா: பாகுபலி படத்தில் தேவசேனையாக நடித்த அனுஷ்கா அதன் பிறகு எந்த படத்திலும் பெரிதாக நடிக்கவில்லை. அது மட்டுமின்றி அவரது உடல் எடையும் வெகுவாக அதிகரித்திருந்தது. தற்போது அவர் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து புது படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பெயர் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்த படத்தில் அனுஷ்காவும், நவீன் பொலிஷெட்டியும் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
அனுஷ்கா மற்றும் நவீன் பொலிஷெட்டியின் கதாபாத்திர இறுதிப்பெயர்களை வைத்து ‘மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. போஸ்டரில் அனுஷ்கா ‘ஹேப்பி சிங்கிள்’ என்ற புத்தகத்துடனும், நவீன் பொலிஷெட்டி ‘ரெடி டூ மிங்கிள்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ள டீசர்ட்டும் அணிந்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. மகேஷ் பாபு.பி இப்டத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கோடை விடுமுறைக்கு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.