எந்த பள்ளிக்கு சென்றாலும் எனக்கு டைம் மிஷினில் பயணிப்பது போல இருக்கு என்று தல தோனி தன் பள்ளி பருவம் குறித்து பகிர்ந்தார்.
பத்தாம் வகுப்பில் நான் தேர்ச்சி அடைய மாட்டேன் என்று நினைத்தார் என் தந்தை ஆனால், நான் தேர்ச்சி அடைந்ததால் அவர் மகிழ்ச்சி அடைந்தார். ஏழாம் வகுப்பிலிருந்தே கிரிக்கெட் விளையாடுவதால் படிப்பில் சராசரி மாணவன் தான். மேலும், எந்த பள்ளிக்கு சென்றாலும் எனக்கு டைம் மிஷினில் பயணம் செய்வது போல இருக்கும். எனது பள்ளி நாட்களை எண்ணி பார்ப்பேன் அந்த நினைவுகள் என்றும் மகிழ்ச்சியாகவும் பசுமையாகவும் இருக்கும் என இந்திய முன்னால் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி கிரிக்கெட் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்து கிரிக்கெட்டின் மீது இருந்த காதலால் ரயில்வே வேலையையும் உதறிவிட்டு நாட்டுக்காக விளையாட துவங்கினார். முன்னாள் கேப்டன் கங்குலியின் மாணவனாக 2004இல் அறிமுகமான அவர் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்ததுடன் நிறைய போட்டிகளில் அதிரடியாக விளையாடி இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்த போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை மாற்றினார்.

மேலும், அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதிவியில் தைரியமான முடிவுகளை எடுத்து அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்திய அவர் 2007 டி20 உலகக்கோப்பையை வென்று 2010இல் இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக தரம் உயர்த்தினார்.
இதையும் படியுங்கள்: தென் இந்திய திரைப்படங்களை தயாரிக்க உள்ள தோனி
2011ல் உலக கோப்பையை இந்திய அணிக்காக வாங்கி கொடுத்தார். 28 ஆண்டுகளுக்கு அடுத்ததாக இக்கோப்பை பெற்றது இந்திய ரசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுது. அது போல ஐபிஎல்லில் சென்னை அணிக்காக பலமுறை கோப்பையை வென்று பெற்று தந்துள்ளார். இதனால் தமிழ்நாட்டு மக்கள் இவரை தல தோனி என்று கூறி தன் அளவற்ற அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் “எம்எஸ் தோனி குளோபல் ஸ்கூல்” என்றே கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி பள்ளியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் இணைந்து துவக்கியுள்ளார். 8 பிட்ச்களுடன் இந்தியாவிலேயே 3வது பெரிய கிரிக்கெட் பயிற்சி பள்ளியாக அமைக்கப்பட்டுள்ள அந்தப் பள்ளியை அக்டோபர் 10ஆம் தேதியன்று திறந்து வைத்த அவர் தாம் பள்ளியில் பயிலும் போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியதால் படிப்பில் சுமாரான மாணவனாக செயல்பட்டதாக இளம் மாணவர்களிடையே பேசினார்.
அதனால் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற மாட்டேன் என்று தமது தந்தை நினைத்ததாக தெரிவித்த அவர் இறுதியில் 66% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதற்கால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்று கூறினார். அதனால் 100க்கு 100% எடுத்தால் தான் வெற்றி என்பதில்லை என்றும் அடிப்படையில் தேர்ச்சி பெற்று நாளடைவில் எந்த துறையாக இருந்தாலும் அதில் உங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு வெற்றி காண முயற்சிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசினார்.
Back to school with the Master! 🏫📖#WhistlePodu #Yellove 🦁💛@msdhoni @superkingsacad pic.twitter.com/UzvIydQ1rk
— Chennai Super Kings (@ChennaiIPL) October 11, 2022