கருத்தரித்து இருப்பதை மருத்துவ சோதனைக்கு முன்பே கணித்த ஆப்பிள் வாட்ச். 34 வயதான ஓரு பெண் சராசரியாக இருப்பதை விட இதயதுடிப்பு அதிகரித்திருப்பதை ஆப்பிள் வாட்ச் மூலம் அறிந்து கொண்டுள்ளார், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தில் கர்ப்பமாகி இருப்பதை அறிந்துள்ளார்.
ஆப்பிள் ஸ்மாட் வாட்ச் மூலம் பல உயிர்கள் பாதுகாக்கப்படும் நிகழ்வுகளை நாம் அவ்வபோது கேட்டு வருகின்றோம். அது என்னவென்றால் ஆப்பிள் ஸ்மாட் வாட்சில் பல உடல்நலம் சார்ந்த மற்றும் விபத்து பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவையாக இருக்கின்றன.
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் அம்சங்கள் , விபத்து ஏற்படும்போது உடனே தன்னிச்சையாக அவசர சேவைக்கு அழைப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதே போல் இதய துடிப்பு கண்காணிப்பு, இசிஜி , நடைபயண கண்காணிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் ஆப்பிள் வாட்ச் நான்கிலிருந்தே இருக்கிறது. ஏற்கனவே, பலரும் இந்த சேவைகளால் பலனடைந்துள்ளதை பல்வேறு ஊடகங்களில் வந்த செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம்.

இந்நிலையில், 34 வயதான ஓரு பெண்ணின் இதய துடிப்பை அதிகரித்திருப்பதை அறிந்த தான் ஓய்வெடுக்கும் நேரத்தின் போது இதயத்துடிப்பு 57 ஆக இருக்கும் எனவும் ஆனால் சமீபத்தில் தனது இதயத் துடிப்பு 72 ஆக அதிகரித்தது எனவும் குறிப்பிட்டார். தான் தினமும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் சட்டம் என்ன சொல்கிறது
தன்னுடைய 18 மாத கைக்குழந்தை தன்னிடம் பால் குடிப்பதால் இதன் காரணமாக இதயத்துடிப்பு அதிகரித்து இருப்பதாக நினைத்து இருக்கின்றாள். தொடர்ந்து இதயத்துடிப்பு அதிகரிக்கவே மருத்துவரை அணுகியுள்ளார். இதனை அடுத்து ஆன்லைனில் கோவிட் பரிசோதனை செய்து உள்ளார் அதில் நெகடிங் என வந்துள்ளது. பின்னர், சளி, காய்ச்சல் போன்ற பரிசோதனைகளை செய்துள்ளார். அதிலும் எந்த ஓரு நெகடிவும் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.
இதையடுத்து பிரசவத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒரு கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் 4 வாரம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பம் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்ததால், இதுதொடர்பான எந்த அறிகுறிகளும் அவருக்கு தென்படவில்லை என கூறப்படுகிறது.
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அவரது உடலில் உள்ள அசாதாரணமான ஒன்றை துல்லியமாக கண்டறிந்து ஆப்பிள் வாட்ச் எச்சரித்தது தான். கர்ப்பத்தை கண்டறிந்ததற்காக தனது ஆப்பிள் வாட்சை அந்த பெண் வெகுவாக பாராட்டினார். அதேபோல் ஆப்பிள் வாட்ச் இல் உள்ள இதயத் துடிப்பு விழிப்பூட்டல்களை அனைவரும் கவனிக்கும் படி பரிந்துரை செய்துள்ளார்.
இது போன்ற தகவல்கள் மற்றும் ஆன்மீகம், ஜோதிடம், கல்வி, தமிழ், செய்திகள் என எண்ணற்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.