முதன் முறையாக நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி.
நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரமாக வலம் வருபவர். இவரின் மாநாடு படம் சூப்பர் ஹீட் ஆனது. இதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமாரு என பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில், கவுதம் மேனனின் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் சிம்புவின் டப்பிங் பணிகளும் முடிந்துள்ளது. இப்படம் செப்டம்பர் 15ல் வெளியாகிறது.
இதையடுத்து தற்போது ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தில் அவர் கேங்ஸ்டராக நடிக்கிறார். இது கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும். சிம்புவுடன் கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இதுதவிர கொரோனா குமார் என்கிற படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் சிம்பு. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை கோகுல் இயக்குகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் முருகதாஸின் கதை ஓன்றிற்கு ஓகே சொல்லி உள்ளார். முருகதாஸ் பல முன்னனி கதாநாயகர்களை வைத்து எடுத்து வெற்றி பெற்றவர். இறுதியாக தமிழில் சூப்பர் ஸ்டாரை வைத்து தர்பார் எடுத்தார். பின் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை இயக்க உள்ளார். இவர் இந்தியிலும் படங்கள் இயக்கி வெற்றி பெற்று வருகிறார்.
சிம்பு முருகதாஸ் கூட்டணி முதன் முறை என்பதால் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.