இந்தியில் புகழ் பெற்ற சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
தமிழ்த் திரையுலகில் தனக்கென பாதை அமைத்து தனிப் பாதையில் இயக்குனர்களாக பயணிப்பவர்கள் அதிகம். அவ்வகையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் அப்படியே தமிழில் பல வெற்றி படங்களை தந்தவர்.
தீனா, ரமணா, கத்தி, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என பல வெற்றி படங்களை தந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் சர்க்கார், ஸ்பைடர், தர்பார் போன்ற படங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே தன் பயணத்தை இந்தி பக்கம் திருப்பி வெற்றி கண்டு வருகிறார்.
அவ்வகையில், கஜினி படத்தை அமீர்கானை வைத்து ரீமெக் செய்தார். அப்படம் மிகுந்த வரவேற்பை பெற்று பெரும் வசூலையும் வாரிக் குவித்தது. கதாநாயகியாக வந்த அசின் இப்படத்திற்குப் பிறகு பாலிவுட் ஹீரோயினியாக வலம் வந்தார்.

மேலும், இந்தியில் துப்பாக்கிப் படத்தை ஹாலிடே என்று ரீமெக் செய்து வெற்றி பெற்றார். இதன் பின் முருகதாஸின் படத்திற்கு நல்ல வரவேற்பு இந்தி திரையுலகிலும் ஏற்பட்டது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. பின் தீடீரென அப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்தியில் ஷாருக்கான மற்றும் சல்மான் கான் இருவரையும் வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இருவருக்கும் கதைப் பிடித்து உள்ளதாகவும் இருவருக்கும் சம்மதம் எனவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 1995 ஆம் ஆண்டு ‘கரண் அருஜுன்’ படத்தில் சல்மான் காணும், ஷாருக்கானுக்கு இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இரு சில படங்களில் சிறிய பகுதியில் இணைந்து நடித்திருந்தாலும் முழு நீள படத்தில் இருவரும் நடிக்கவில்லை. இந்நிலையில் 27 வருடங்களுக்கு பிறகு இந்த சல்மான் கான், ஷாருக்கான் இருவரும் இணைந்து முழு படத்தில் நடிக்கவுள்ள இந்த செய்தி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இப்படம் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.