குடியரசு தினம்: வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ என்று தொடங்கும் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப நம்நாட்டின் அருமை பெருமைகளைப் படமாக்கி ‘எந்தையும் தாயும்’ என்று பெயரிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கையும், பாடகியுமான இஷ்ரத் காதிரி.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இப்பாடல் நம் தேசத்துக்கு நான் செலுத்தும் சின்ன நன்றிக்கடன். எனது அண்ணன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன். தற்போது சில படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். ‘எந்தையும் தாயும்’ என்ற பாடலை தயாரித்து இசையமைத்து பாடி நடித்துள்ளேன்.இதையடுத்து பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளேன்’ என்று அவர் கூறினார்.
‘எந்தையும் தாயும்’ பாடலுக்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.மாதேஷ் இதை இயக்கியுள்ளார். வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று இப்பாடல் வெளியிடப்படுகிறது. தற்போது இப்பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.