AK 62 படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி காமெடியானாக சந்தானம் இணைந்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் துணிவு வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தன் குடும்பத்தோடு சுற்றுலா சென்று வந்து கொண்டு உள்ளார். நேற்று கூட கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகவர் சுவாமி திருக்கோவிலுக்கு சத்தம் இல்லாமல் வந்து சென்றுள்ளார். இதனை பல ரசிகர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அஜித் இயல்பாகவே உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து வருகிறார். ஓவ்வொரு படத்தின் முடிவிலும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தியா முழுவதிலும் சென்று வந்துள்ள அஜித் பல முக்கிய நாட்டிலும் பைக் ரைடை முடித்துள்ளார்.

இந்நிலையில், எச் வினோத் இயக்கத்தில் போனிக்கபூர் தயாரிப்பில் மஞ்சுவாரியர், விநாயக், சமுத்திரக்கனி போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி அரைவரையும் கவர்ந்து வந்து வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்த 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை அஜித் கேட்டு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அதில் வரும் காமெடினாக சந்தானத்தை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என அஜித் மற்றும் விக்னேஷிம் பேசியுள்ளனர். இதனை சந்தானத்திடமும் இயக்குனர் கூறியுள்ளார்.
அதோடு விடாத அஜித் நடிகர் சந்தானத்தை போனில் தொடர்பு கொண்டு இப்படத்தில் நாம் இருவரும் நடிக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத சந்தானம் கதாநாயகனாகவே நடிப்பது என்ற எண்ணத்தை விட்டு அவருக்கு ஓப்புதல் அளித்துள்ளார்.
அஜித்துடன் சந்தானம் இறுதியாக வீரம் படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின்னர் இப்படத்தில் நடிக்கவுள்ளார். அது போல வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியை நடிக்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
நடிகர் சந்தானம் சமீப காலாமாக கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்துள்ளார். இருப்பினும் எந்த படமும் சிறப்பான படமாக எடுப்படவில்லை பல தோல்விகளை சந்தித்து வருவதாலும் தனது காமெடியன் இடத்தை திரும்பவும் தூசுத் தட்டி ரசிகர்களுக்கு சிறந்த காமெடிகளை வழங்கவுள்ளார்.
இதையும் படியுங்கள்: தனது பிறந்தநாளில் கற்றார் என்ற புதிய தளத்தை உருவாக்கிய இசைப்புயல்
இது போன்ற பல தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.