கால்பந்து: கத்தாரில் நடைபெற்ற 22 வது உலக கோப்பை கால்பந்து தொடர் கோலாகலத்துடன் நேற்று நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் நேற்று அர்ஜென்டினா -பிரான்ஸ் அணிகள் மோதின. இறுதி போட்டிக்கு முன்பாக கலைநிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கையுடன் நிறைவு விழா நடைபெற்றது. நைஜீரியாவை சேர்ந்த பிரபல பாடகர் டேவிடோ, மொராக்கோ நடிகை நாேரா பதேஹி, தென் கொரியாவின் பிடிஎஸ் குழுவினர் இசை மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்தனர். பாலிவுட் நடசத்திரம் தீபிகா படுகோன், ஸ்பெயின் கால்பந்து நட்சத்திரம் இகோர் காசில்லாஸ் இருவரும் இணைந்து லூசெய்ஸ் ஸ்டேடியத்தில் உலக கோப்பையை காட்சிபடுத்தினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணியினர் இருவருமே மாறி மாறி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தனர். பிரான்ஸ் அணியின் எம்பாப்வே மற்றும் அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி ஆகியோர் ஆட்டத்தை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்றனர். கால்பந்தாட்ட ரசிகர்கள் ஒவ்வொருவரையும் இருக்கையின் நுனியில் அமர வைத்தது இந்த இறுதி ஆட்டம். கோல்கள் சமநிலையில் இருந்ததால் இந்த போட்டி பெனால்ட்டி ஷீட் முறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் கேப்டன் மெஸ்ஸி அடித்த கோல் அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை வென்று தந்தது.
1978,1986 ஆண்டுகளுக்கு பிறகு 3 வது முறையாக 2022ல் அபாரமாக வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இதனால் 36 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது அர்ஜென்டினா அணி. மெஸ்ஸி ஏற்கனவே இந்த இறுதிப்போட்டியுடன் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்த நிலையில் உலக கோப்பையுடன் அவர் விடைபெறுவது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் ஆராவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.