டிமான்ட்டி காலணி: அருள்நிதி அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏற்கனவே நடித்து பெரிய ஹிட் அடித்த படம்தான் ‘டிமான்ட்டி காலணி’. த்ரில்லர் கதையை பின்னணியாக கொண்ட இந்த படம் முழுவதும் ஒரு வீட்டுக்குள்ளேயே நடப்பதாக இருந்தது. ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்த படம் அருள்நிதிக்கு ஒரு பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலணி 2’ திரைப்படத்தில் மீண்டும் அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்து கூட்டணி இணைகிறது. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.
இப்படத்துக்கான ‘இருள் ஆளப்போகிறது’ என்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களாக ரசிகர்களுடைய ஆர்வத்தை அதிகரித்து வந்தது. இதில் QR கோட் இருக்கிறது. அதை ஸ்கேன் செய்வதன் மூலமாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் பார்க்கலாம். தற்போது முதற்கட்டமாக 40 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளது. 2வது கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்குகிறது. தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்ய சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். அஜய் ஞானமுத்துவின் ஞானமுத்து பட்டறை, விஜய் சுப்ரமணியனின் ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.