பத்து தல: சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தை இயக்கியவர் கிருஷ்ணா. இவர்தான் சிம்புவின் ‘பத்து தல’ படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல தடவை மாற்றியமைக்கப்பட்ட நிலையில் தற்போது வரும் மார்ச் 30ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ‘பத்து தல’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் வேடத்தில் சிம்பு நடித்திருக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி கிடையாது என்று கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டீசரில் பல்வேறு கதாபாத்திரங்களை காட்டினாலும் சிம்புவின் என்ட்ரியை சஸ்பென்ஸாக வைத்து டீசர் முடியும் போதுதான் அவரது முகத்தை காட்டுகிறார்கள். மார்ச் 30ம் தேதி வெளியாகும் இப்படத்தை சிம்பு அதிகம் நம்பியுள்ளார். அதே போல் இந்த படம் தனக்கு பிரேக் தரும் என இதில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் கெளதம் கார்த்திக்கும் சொல்லியிருக்கிறார். இந்த படத்தில் ஆர்யாவும் அவரது மனைவி சாயிஷாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். அதை படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருந்தது. ஆனால் தற்போது அந்த விவரம் வெளியாகியுள்ளது.