மீண்டும் இந்தியா பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில் பரபரப்பு அதிகரித்துள்ளது

0
15

மீண்டும் இந்தியா பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில் ரசிகர்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது.

2022 ஆசிய கோப்பைக்கான போட்டிகள் 15வது லீக் தொடர்கள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதன் ஓரு கட்டமாக நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் திரும்பவும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் 4 சுற்றில் தகுதிபெற்ற இரு அணிகளும் நாளை மோதவுள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பும் ஆராவாரத்துடன் கூடிய பரபரப்பும் அதிகரித்துள்ளது.

6 அணிகள் கலந்துகொண்ட இத்தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் சூப்பர் “4” சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. முன்னதாக நடந்த லீக் சுற்றில், ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த ஆப்கானிஸ்தான் அணி வங்க தேசம் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி முதலாவது அணியாக சூப்பர் “4” சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படியுங்கள்: ஆசிய கோப்பை 2022: சூப்பர் 4 சுற்று முழு அட்டவணை

மீண்டும் இந்தியா பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில் பரபரப்பு அதிகரித்துள்ளது

இதேபோல், ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்தியா ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்து சூப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன்பிறகு, வங்க தேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணியும், ஹாங்காங்கை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணிகளும் சூப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்று முதல் சூப்பர் 4 சுற்று தொடங்கவுள்ள நிலையில் முதலாவதாக ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளது. கடந்த போட்டியில் இலங்கையை வென்ற ஆப்கானிஸ்தானுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் என எதிர்பார்கக்ப்படுகிறது.

நாளை இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற உள்ளது. கடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது. ஆகவே பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதிநிலையில் விளையாடும். இந்தியா வென்ற அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here