கபில்தேவ் இந்திய கிரிக்கெட் ஜாம்பாவான்களில் ஓருவராக இருந்தவர். அவரின் தலைமையில் ஆடிய இந்திய அணி உலக கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர் போன்றோரின் வரிசைகளில் இணைந்துள்ளார் அஸ்வின்.
வங்கதேசத்தில் நடைபெற்று வந்த டெஸ்ட்தொடரில் இந்திய அணி கோப்பை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தமிழகத்தை சார்ந்த ஆல்ரவுண்டர் அஸ்வின். இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்து வந்தனர்.
78க்கு 7 விக்கெட்டுகளை பறிக் கொடுத்து இந்திய அணி தடுமாறி வந்தது. அப்போது சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்த ஸ்ரேயாஸ் மற்றும் சூழல் பந்து வீச்சாளாரான அஸ்வினும் இணைந்து இந்திய அணி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். அதிகபட்சமாக அஸ்வின் 62 பந்துகளில் 4 பவுன்டரி 1 சிக்ஸருடன் 42 ரன்களை குவித்து வெற்றிக்கு வழி வகுத்ததுடன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

இந்த தொடர் மூலம் அஸ்வின் கபில்தேவ் உள்ளிட்ட முக்கிய ஜாம்பாவன்களின் பட்டியலில் இணைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ், ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னே, நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹார்ட்லி, தென்னாப்பிரிக்கா வீரர் ஷான் பொல்லாக் பட்டியலில் அஷ்வின் இணைந்து இருக்கிறார்.
கபில்தேவ் – 5248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகள்
ஷான் பொல்லாக் – 3781 ரன்கள் மற்றும் 421 விக்கெட்டுகள்
ஸ்டூவர்ட் பிராட் – 3550 ரன்கள் மற்றும் 566 விக்கெட்டுகள்
ஷேன் வார்ன் – 3154 ரன்கள் மற்றும் 708 விக்கெட்டுகள்
சர் ரிச்சர்ட் ஹாட்லீ – 3124 ரன்கள் மற்றும் 431 விக்கெட்டுகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் – 3043 ரன்கள் மற்றும் 449 விக்கெட்டுகள்
இந்த வரிசையில் கபில்தேவை ஷான் பொல்லாகை விட அதிக விக்கெட்டுகளை எடுத்து முன்னிலையில் உள்ளார். அஸ்வின் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் 1 விக்கெட்டு எடுக்கும் பட்சத்தில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி குறைந்த டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அஷ்வின் பெறுவார்.
இப்போதைக்கு, முன்னாள் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே மார்ச் 2005 இல் தனது 93 வது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை எட்டியபோது இந்திய சாதனை படைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: அஸ்வின் குறித்து ஷேவாக் டிவிட் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது
நியூசிலாந்துக்கு எதிராக 80 போட்டிகளில் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முத்தையா முரளிதரன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அஸ்வினைப் பொறுத்தவரை, அவர் 88 போட்டிகளில் 449 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.