ஆஸிக்கு எதிராக 3 விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்த அஸ்வின்

0
10

ஆஸிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்களை எடுத்த சூழல் பந்து வீரர் அஸ்வின் புதிய சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகளை எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஓருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று 9ந் தேதி தொடங்கி மார்ச் 13ந் தேதி வரை விளையாட உள்ளது. இதில் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டிகள் இன்று தொடங்கியது.

டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிராஜ் மற்றும் ஷமியின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினர். பின்னர், வந்த ஸ்மித் மற்றும் லபுஷேனும் நிதானமாக ஆடி வந்த நிலையில் அவர்களும் 49, 37 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸிக்கு எதிராக 3 விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்த அஸ்வின்

கேரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்களை குவித்திருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை பறிக் கொடுத்த ஆஸ்திரேலிய அணி 63 ஓவர்களில் 177 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. இந்த குறுகிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இப்போட்டியில் ரவிச்சந்திர அஸ்வின் எடுத்த விக்கெட் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 452 விக்கெட்டுகளை எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

முதல் இடத்தில் 619 விக்கெட்டுகளுடன் அணில் கும்ளேவும், இரண்டாவது இடத்தில் அஸ்வினும் இந்த சாதனையில் இணைந்துள்ளார். மேலும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 450 ரன்களை கடந்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையம் படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: திருமண பரிசாக பல கோடி மதிப்புள்ள பொருட்கள் பெற்ற நட்சத்திர தம்பதி

இது போன்ற செய்திகளை அறிய தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here