ASIA CUP 2022: அஸ்வின் களம் இறங்குவாரா என்று சந்தேக நிலையே உள்ளது. சூழல் மற்றும் பேட்டிங்கில் ஆல்ரவுண்டராக வலம் வருகிறார் அஸ்வின் பலத்த போட்டியின் காரணமாக யாரை இறக்குவது என்ற குழப்பத்தில் அணியின் கேப்டன் உள்ளதாக தகவல்.
2018 ஆம் ஆண்டுக்கு பின் நடக்கும் முதல் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் விளையாட்டு இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் நாளை இரவு 7.00 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற இருப்பதால் ரசிகர்கள் பெரும் ஆர்வதத்தில் உள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் விளையாட்டு என்றாலே பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும். இந்நிலையில், இந்திய அணியில் ரவீச்சந்திர அஸ்வின் சேர்க்கப்பட்டாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் ப்ளேயிங் 11 தான் ரசிகர்களிடையே தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங்கில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் யாரோ ஒருவருக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்பதால், யார் நீக்கப்படுவார் என ரசிகர்களுக்கு குழப்பம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, பவுலிங் படை மிக குழப்பமாக உள்ளது.
கடந்தாண்டு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த களம் குறித்து அவருக்கு நல்ல அனுபவம் இருப்பதால், அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓரு இடத்திற்கு தான் பலத்த போட்டி நிலவுகிறது. யுஜ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு இடையில்தான் போட்டி இருக்கிறது. கடைசி இடத்திற்கு முழுநேர ஸ்பின்னரைத்தான் சேர்க்க வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் சஹலுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய உத்தேச லெவன் (ஆசியக் கோப்பை 2022): ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் / கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், யுஜ்வேந்திர சஹல்.