பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதில் அதர்வா

0
7

வணங்கான்: பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பு தொடங்கியது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க முன் வந்தது. படப்பிடிப்பு 30 சதவீதம் முடிவடைந்த நிலையில் திரைக்கைதியல் செய்யப்பட்ட மாற்றங்கள் சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியிலேய நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சூர்யா இப்படத்திலிருந்து விலகினார். இது தொடர்பாக இயக்குனர் பாலாவும் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சூர்யாவுக்கு தகுந்த படமாக இது இல்லாத காரணத்தால் நானும் சூர்யாவும் ஒருமனதாக முடிவெடுத்து இப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொண்டார் என்று கூறியிருந்தார். இதையடுத்து தனது 2டி நிறுவனமும் பட தயாரிப்பிலிருந்து விலகிக் கொள்வதாக சூர்யா தரப்பு அறிவித்தது.

atharva to replace for surya

இப்போது இந்த படத்தை புதிதாக உருவாக்க பாலா முடிவு செய்துள்ளார். படத்தின் தலைப்பு ‘வணங்கான்’ தான் என்றும், அதன் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டிதான் என்றும் பாலா கூறியுள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தை நடிகர் அதர்வாவுக்காக பாலா இயக்க இருந்தார். ஆனால் இந்த கதையை கேட்டுவிட்டு சூர்யா தான் நடிப்பதாக சொன்னதாலயே அவரை இதில் பாலா நடிக்க வைத்தார். இப்போது சூர்யா விலகி இருப்பதால் திரும்பவும் இதில் அதர்வாவே நடித்தால் நன்றாக இருக்கும் என பாலா விரும்பியுள்ளார். இதற்காக அதர்வாவிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here