ATM கார்டு இல்லாமல் அனைத்து வங்கி ATMமிலும் இனி பணம் எடுக்கலாம்

0
2

இனி இந்தியாவில் உள்ள எந்த ஓரு ATM மிலும் இனி ATM CARD இல்லாமல் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டுள்ளார்.மூன்று நாள் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட திட்டங்களை சக்திகாந்த தாஸ் 8ம் தேதியான நேற்று தெரிவித்தார். இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ATM -மும் மோசடிகளும்

ஏடிஎம் (ATM) மிலிருந்து பணம் எடுப்பது எளிமையாக உள்ளது. ஆனால், ஓரு சில நேரங்களில் இயந்திர கோலாறு ஏற்பட்டால் ATM கார்டுகள் உள்ளே சிக்கிக் கொள்கின்றது. பெரும்பாலான முதியவர்கள் ஏடிஎம் மிலிருந்து பணம் எடுப்பதை எளிமையாக பார்த்தாலும் சில முதியவர்களுக்கு கடினமாக உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர் வழிகள் அவர்களை ஏமாற்றி மாற்று ஏடிஎம் கார்டுகளை கொடுத்து விடுகின்றனர்.

ATM கார்டு இல்லாமல் அனைத்து வங்கி ATMமிலும் இனி பணம் எடுக்கலாம்

அவர்களின் கார்டுகளை பயன்படுத்தி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் பல இடங்களில் பல மோசடிகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்லாட்டில் ஸ்கின்னர் பொறுத்தி பாஸ்வேடுகளையும் ஏடிஎம் கார்டு நம்பர்களையும் சில மோசடி கும்பல்கள் கைவரிசை காட்டுவிடுகின்றனர்.

இத்திட்டத்தை முன்னரே செயல்படுத்தும் வங்கிகள்

இப்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ (SBI), ஐசிஐசியை (ICICI), ஆக்சிஸ் (AXISS) மற்றும் பேங்க் ஆப் பரொடா (BANK OF BARODA) ஆகிய வங்கிகள் மட்டுமே நடைமுறைப் படுத்தியுள்ளது என்பது குறிப்பிட தக்க ஓன்றாகும். கோவிட் 19 தொற்று காலத்தில் ATM க்கு செல்லவே மக்கள்  பயந்தனர். அதனை தொடர்ந்து இத்திட்டம் அப்போதே கொண்டு வரப்பட்டது.

டெபிட் கார்டு இல்லாமல் பணம் பெறுதல் என்றால் என்ன?

UPI வசதியை பயன்படுத்தி ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் திட்டமானது செயல்படுத்தப் படுகிறது. IMT(உடனடி பணப் பறிமாற்றம்) மூலம் செயல்படுகிறது. வாடிக்கையாளரின் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி பணத்தை மாற்றவும் பணத்தை எடுக்கவும் அனுமதிக்கன்றது.

UPIன் மூலம் டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம் மிஷின்களில் பணம் எடுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மோசடிகளை  ஓடுக்க வழி வகுக்கும் எனவும் ரிசர்வ் வங்கியின் தலைவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here