ATM மில் சேவை கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. நாடு முழவதிலும் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம்-களில் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்-களில் 3 முறையும் பணம் எடுக்க எந்த ஓரு கட்டணமும் இல்லை. அதுவே கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம் களில் 5 முறைக்கு மேலும், வேறு வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேலும் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற சட்டம் முன்பிலிருந்தே இருந்து வருகிறது.
இதற்கான கட்டணமாக நேற்று வரை 20 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இன்று முதல் 21 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்கச்சக்கமான டிஜிட்டல் கட்டண முறைகள் வந்து விட்டாலும், ஏடிஎம்மில் பணம் எடுக்கும் தேவை இன்னும் இருக்கிறது. சில இடங்களில் பணம் கொடுத்து தான் பொருட்களை வாங்க வேண்டும். தேவையான போது பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற பழக்கம் பரவலாக உள்ளது. ஆனால், இனி தேவைப்படும் போதெல்லாம் அல்லது விரும்பும்போதெல்லாம் இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது.

ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு இனி வங்கிகளால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு மாதத்திற்கு இத்தனை முறை தான் ஏடிஎம் பயன்படுத்த முடியும். வங்கி கணக்கு வைத்து உள்ள ஏடிஎம்களில் கட்டணம் இல்லாமல் 5 முறையும் மற்ற வங்கி ஏடிஎம் என்றால் 3 முறையும் பணம் எடுக்க இலவசம் என்ற நடைமுறை உள்ளது.
இதுபோன்ற செய்திகள், ஆன்மீகம், ஜோதிடம், உடல்நல்ம் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை அனுகுங்கள்.