அட்சய திரிதியை: அப்படி என்ன சிறப்பு

0
20

அட்சய திரிதியை இந்தாண்டு மே மாதம் 3 ம் தேதி அட்சய திரிதியைக்கு உரிய நாள் அதாவது சித்திரை மாதத்தின் 20 ம் நாளில் வருகிறது. அட்சய திரிதி என்றால் அள்ள அள்ள குறையாத நாள் என்று அர்த்தம் அட்சய திரிதியை நாளில் நாம் மனதார எதை செய்கிறோமோ அது மேலும் மேலும் வளரும் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமியின் அருள் நிறைந்த நன்நாளாக பார்க்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம் தட்சனின் சாபத்தால் தேய்ந்து கொண்டே போன சந்திரன், சிவபெருமான் அருளால் வளர தொடங்கியதும் அட்சய திரிதியை நாளில் தான் அட்சய பாத்திரம் எப்படி அள்ள அள்ள குறையாது தந்து கொண்டே இருக்கிறதோ அதைபோலவே நாம் செய்யும் நற்காரியங்களும் நம்மை வாழ்த்தும் நம்மை மேம்படுத்தும்.

அட்சய திரிதியை: அப்படி என்ன சிறப்பு
அட்சய திரிதியை: அப்படி என்ன சிறப்பு

அவரவர் குடும்பத்தின் நிலைக் கருதி எவற்றை வேண்டுமானாலும் வாங்கலாம். எவற்றை வேண்டுமானலும் தானம் செய்யலாம் மிக முக்கியமாக அக்ஷ்ய திரிதியை அன்று நம்மால் இயன்ற, இயலாதவர்களுக்கு உதவ வேண்டும். நம் வீட்டிற்கு தேவையான உப்பு, மஞ்சள், அரிசி, என அன்று வாங்கி வீட்டில் வைப்பதும் நன்மையை தரும்.

இயலாதவர்க்கு உதவுதல்

 • நம் வீட்டின் அருகே ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் புத்தகம், நோட்டு, பேனா, பென்சில், ரப்பர் ஆகியவற்றை கொடுத்து உதவலாம்.
 • ஏழ்மையான குழந்தைகளுக்கு ஆடைகள் வழங்கி அவர்களை மகிழ்விக்கலாம். நீங்களும் மகிழலாம்.
 • அட்சய திரிதியை அன்று மட்டுமாவது வீட்டிற்கு அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கலாம். முடிந்தால் அப்போது கற்பிக்கலாம் இலவசமாக.
 • உடலால் முடியாதவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.
 • கோடை காலமாக இருப்பதால் நம் வீட்டிற்கு முன் ஓரு குடம் நிறைய தண்ணீர் வைத்து வழிபோக்கர்களின் தாகத்தை தீர்க்கலாம்.

அட்சய திரிதியை திருநாளின் சிறப்புகள்

 1. பகவான் பரசுராமர் அவதரித்த நாள்
 2. கங்கை நதி பூமியா தொட்ட நாள்
 3. திரேதா யுகம் ஆரம்பமான நாள்
 4. குசேலர் கிருஷ்ணரை சந்தித்த நாள்
 5. வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்
 6. பஞ்ச பாண்டவர்கள் சூரியனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்
 7. குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்
 8. அன்னபூரனி தேவி அவதரித்த நாள்
 9. ஆதிசங்கரா் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்
 10. இந்த நாளில் வீட்டிலுள்ள பல்லிகள் யார் கண்ணிலும் தென்படாமல் மறைந்து விட வேண்டும் என்பது வாஸ்து பகவான் கட்டளையிட்ட நாளாகவும் கூறுவார்கள்.
 11. ஓரு சிலர் பல்லியை வழிப்படவும் செய்வார்கள். இந்த அட்சய திருதியை நாளில் பல்லியை கண்டுவிட்டால் எல்லா பீடைகளும் நீங்கி, திரிஜென்ம பாவங்களும் நீங்க பெற்று லட்சுமி கடாக்ஷம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

இப்படி சிறப்பானதொரு நாளை வெறும் தங்கம் மற்றும் நகைகள் வாங்குவதை மட்டுமே கருதி வியாபார நோக்கில் மக்களிடம் எடுத்து சொல்லப்பட்டதாக தோன்றுகிறது. அட்சய திரிதியை அன்று நாம் செய்யும் காரியங்கள் தொடர்ந்து வளர்ந்து வெற்றியை தரும் என்பது மக்களின் நம்பிக்கை. அனைவரும் நம்மால் முடிந்த நற்செயல்களை செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here