கிறிஸ்துமஸ்க்காக தனது ஊழியர்களுக்கு ரூ.82 லட்சம் போனஸ் கொடுத்து அசத்திய ஆஸதிரேலிய பெண் தொழிலதிபர்

0
8

ஜினா ரைன்ஹார்ட்: உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான், டிவிட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வேளையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் நிறுவனர் ஒருவர் தன்னுடைய ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது 82 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார் என்ற செய்தி உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

australia'a richest women gina give 82 lakhs bonus for her company employees

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான இரும்பு தாது சுரங்கம் நடத்தும் ராய் ஹில் கம்பெனியின் எக்சிகியூட்டிவ் நிறுவனரான ஜினா ரைன்ஹார்ட் தான் தனது ஊழியர்களுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்களை போனஸாக வழங்கி அசத்தியுள்ளார். இந்த போனஸ் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தனது ஊழியர்களிடம் முக்கியமான அறிவிப்பை வெளியிட இருக்கிறேன் என்று அனைவரையும் மீட்டிங் ஹாலிற்கு வர செய்திருக்கிறார் ரைன்ஹார்ட். ஏற்கனவே முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளதால் அதுபோல் எதுவும் இங்கு நடக்கப்போகிறதோ என்ற அச்சத்துடன் அனைவரும் மீட்டிங் ஹாலிற்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் ஜினாவோ தனது ஊழியர்களுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்களை போனஸாக தருவதாக அறிவித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். போனஸ் கொடுக்கப்பட்ட 10 ஊழியர்களில் ஒருவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஜினாவின் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 34 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் சொத்துக்களுக்கு அதிபதியான ஜினா ரைன்ஹார்ட் தனது அப்பா மறைவுக்கு பிறகு இந்த சுரங்கத்தை ஏற்று நடத்தி வருகிறாராம். கடந்த ஆண்டு ராய் ஹில் நிறுவனத்திற்கு நல்ல வருமானம் கிடைத்த நிலையில் தனது ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் ஜினா. ஜினாவின் இந்த போனஸ் அறிவிப்பு ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் பல முன்னணி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here