அவதார் 2 பத்து நாட்களில் 7000 கோடி வசூலித்து உள்ளது

0
5

அவதார் 2 த வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை 7000 கோடி ரூபாய் அளவில் வசூல் ஈட்டி சாதனை புரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகமெங்கும் திரையிடப்பட்டு அனைவரது கவனத்தையும் திருப்பியது. அந்த படம் மாபெரும் வெற்றி படமாகவும் வசூலில் சாதனையும் படைத்தது. தொடர்ந்து அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதை அறிந்த கேம்ரூன் இந்த படத்தை 5 பாகங்களாக வெளியிட முற்பட்டுள்ளார். இப்போது அப்படத்தின் 2வது பாகம் வெளியாகி உலக திரையரங்குகளில் சாதனை புரிந்து வருகிறது.

தற்போது, தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 160 மொழிகளில் உலகமெங்கும் வெளியாகி பெரும் வெற்றி கண்டு வருகிறது. இதில் வரும் கதாப்பாத்திரம் முற்றிலும் கற்பனை கதாபாத்திரத்தின் அடிப்படையில் உருவாகியது. இந்த படம் தொடர்ந்து 5 பாகங்களாக உருவாகி உள்ளது. 2023ம் ஆண்டு 3ம் பாகமும் 2024ம் ஆண்டு 4ம் பாகமும் தொடர்ந்து 2025ம் ஆண்டு 5ம் பாகத்தையும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவதார் 2 பத்து நாட்களில் 7000 கோடி வசூலித்து உள்ளது

இப்படத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகை 2000 கோடி எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அவதார் 2 இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய மதிப்பில் ரூ 7 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் 10 நாட்களில் ரூ.300 கோடியைத் தாண்டியது. வரும் நாட்களில் நாட்டில் ரூ.500 கோடியை எதிர்பார்க்கப்படுகிறது. அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் தற்போது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: 2022 ஆம் ஆண்டில் பாக்ஸ் ஆபிசை கலக்கிய டாப் 10 திரைப்படங்கள்

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here