அவதார் 2: தி வே ஆப் வாட்டர் இந்தியாவில் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவலை இந்த பதிவின் மூலம் அறியலாம்.
உலக அளவில் 2009ம் ஆண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி மிக பிரம்மாண்ட முறையில் வெளியான திரைப்படம் அவதார் இப்படம் அன்று 1500 கோடி பொருட் செலவில் உருவாகி வந்தது. இந்தியாவில் மட்டும் வெளியான முதல் நாளில் 100 கோடியை சாதாரணமாக எடுத்து வரலாற்று வெற்றியும் வசூலும் செய்து அசத்தியது.
தற்போது, இப்படம் அடுத்தடுத்த 5 பாகங்களை கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 16 ல் அவதார் 2 வெளியாகியுள்ள நிலையில் 3வது பாகம் அடுத்த 2023ம் ஆண்டு வெளியாகும். தொடர்ந்து 2025ம் ஆண்டு 5வது பாகம் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
வேற்று கிரகவாசிகள் போல உருவாகி இருக்கும் இப்படத்தின் ஓரு மணிநேர படக்காட்சிகள் அவதார் 2ல் கடலுக்கு அடியில் தத்துரூபமாக உருவாகியுள்ளது. 3 மணிநேர படக்காட்சில் நம்மை வியக்க வைக்கும் அனுபவத்தை தருவதாக ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து வந்த அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்புது மிருகங்கள், புது இன நாவி மக்கள் என நிறைய இந்த பாகத்தில் நிறைய புதுமைகளை புகுத்தி கைத்தட்டலை பெற்றுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். கடலில் துப்பாக்கியுடன் மனிதர்களும், அம்புடன் நாவி மக்களும் சண்டையிடும் காட்சிகளின் கிராஃபிக்ஸ் காட்சி படம் பார்த்தவர்களை வாயடைக்க வைத்துவிட்டது.
அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர் 160 மொழிகளில் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் படம் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. இப்படம் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் அதிக வசூலாகி உள்ளது. தமிழ்நாட்டில் 3 முதல் 5 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 8 முதல் 10 கோடியும், கர்நாடகாவில் 4 முதல் 6 கோடியும், கேரளாவில் 2 முதல் 2.5 கோடியும் வசூலாகி உள்ளது.
கிட்டத்தட்ட 39 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றது. இந்தியாவில் வட இந்தியாவை விட தென் இந்தியாவில் தான் வசூல் அதிகம் ஸ்கீரின்களும் அதிகம். பட விநியோகஸ்தர்கள் இது மிகவும் குறைவு என்று புலம்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: நடிகர் சூர்யா 42 படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.