மீண்டும் மீண்டும் வசூல் சாதனை நிகழ்த்தும் அவதார் திரைப்படம் ரீரிலிஸ் செய்து இதுவரை 350 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
3D தொழில் நுட்பத்தில், கடந்த 23ம் தேதி ரிலிஸ் செய்யப்பட்ட அவதார் திரைப்படம் உலம் முழுவதிலும் 4 நாட்களில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 7 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல்.
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவதார் படத்தை கேம்ஸ் கேமரூன் உருவாக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.

அதன்படி, 2ம் பாகத்திற்கான பணிகளை செய்து வருகின்றார் கேமரூன் இப்படம் 2023ல் டிசம்பரில் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், மறுஓளிப்பரப்பு இப்படம் திரையரங்குகளுக்கு வெளியிடப்பட்டது. அதிலும் பெரும் சாதனை நிகழ்த்தி வருவது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
செப்டம்பர் 23-ந்தேதி அவதார் முதல் பாகம் மீண்டும் ஐமேக்ஸ், டால்பி வசதியுடன் திரையில் மீண்டும் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பிரான்ஸ், கொரியா, சவூதி அரேபியா, பெல்ஜியம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதன் மொத்த வருவாய் 87 ஆயிரம் டாலராக இருந்துள்ளது.
டிசம்பர் 16ம் தேதி “அவதார் 2” வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வைரலாக இருந்து வருகிறது. 24 மணி நேரத்தில் 148 மில்லியன் பார்வைகளை அவதார் 2 டீசர் பெற்றது.