ரஜினியின் பிறந்தநாளான வருகின்ற 12ம் தேதி அன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் திரையிடப்பட்ட பாபா திரைப்படத்தை புது டிஜிட்டல் முறையில் புதிய வடிவில் தர அப்படத்தின் இயக்குனர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் வெற்றி மாபெரும் வெற்றி படங்களான பாஷா, வீரா, அண்ணாமலை ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணா இந்த வெற்றி படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் கதை, திரைக்கதை, தயாரிப்பு என அனைத்தையும் ரஜினியே செய்திருந்தார். இந்த படம் 2002 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ரஜினிகாந்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் புதிய கதை அம்சத்தில் சூப்பர் ஸ்டார் சிறப்பாக நடித்து இருந்தார். பாபாவில் ரஜினிக்கு ஜோடியாக அப்போது முன்னணி நடிகையாக இருந்த மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். கவுண்டமணி, சுஜாதா, ஆசிஷ் வித்யார்த்தி, நம்பியார், விஜயகுமார், சாயாஜி ஷிண்டே, டெல்லி கணேஷ், கருணாஸ், ரியாஸ் கான் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றிருந்தனர்.

இப்படம் அரசியல் மற்றும் ஆன்மீகம் கலந்த படமாக அமைந்திருந்தது. விறுவிறுப்பான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் வரும் டைலாக்குகள் சிறப்பு வாய்ந்தவை பாபா கவுண்டிங் ஸ்டாட் பாபா சின் முத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹூட்டாகியது. இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து இப்படத்தை புதிய தொழில் நுட்பத்துடன் உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று ரஜினகாந்த அப்படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகின்றது. மேலும், பாபா படத்தின் ஒவ்வொரு காட்சியும், தற்போதைய தொழில்நுட்பத்தின்படி கலரிங் செய்யப்படும் என்றும், பாடல்கள் மற்றும் பின்னணி இசை டால்பி முறையில் சவுண்ட் மிக்ஸிங் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று முன்பு வெளியான பாபா படத்தில் இடம்பெறாத காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாபா படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதியையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: பேசும் படத்தின் 35 வது ஆண்டை கொண்டாடிய உலகநாயகன்
இது போன்ற பலவித தகவல்களை தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.