கேரளாவில் 75 ஆண்டுக்கும் மேலாக கோயில் குளத்தில் வசித்த பபியா முதலை மரணம்

0
9

பபியா முதலை:  கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டத்தில் உள்ளது கும்பளா கிராமம். இது கர்நாடக மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அனந்நபுரம் பத்மாநாபசுவாமி கோயில் உள்ளது. குளத்தின் நடுவே இக்கோயில் அமைந்துள்ளது இதன் சிறபபம்சமாகும். இந்த குளத்தில் 75 வருடங்களுக்கு மேலாக பபியா என்ற முதலை வசித்து வந்தது. காலையும் மதியமும் கோயிலில் பூஜை முடிந்த பிறகு பூசாரி வழங்கும் பிரசாதமான அரிசி சாதத்தை மட்டுமே முதலை சாப்பிட்டு வந்தது. இந்த குளத்தின் வடக்குப் பகுதியில் 2 குகைகள் உள்ளன. பகல் நேரங்களில் இந்த குகைக்குள் தான் இந்த முதலை இருக்கும். கோயில் நடை திறந்திருக்கும் வரை குளத்தை விட்டு முதலை வெளியே வராது. நடையை சாத்திவிட்டு அனைவரும் சென்ற பிறகு தான் வெளியே வரும். ஆனால் குளத்தை ஒட்டியுள்ள இடத்தை தவிர வேறு எங்கும் செல்லாது. பபியா முதலையை காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவது வழக்கம்.

1945ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இக்குளத்தில் உள்ள ஒரு முதலையை சுட்டுக் கொன்றதாகவும், மறுநாளே இந்த பபியா முதலை அந்த குளத்தில் திடீரென தோன்றியதாகவும் நம்பப்படுகிறது. கோயில் பூசாரி அரிசி சாதத்துடன் குளத்தின் கரைக்கு சென்று பபியா என்று அழைத்தவுடன் பாய்ந்து வந்து உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் குளத்திற்குள் சென்று விடும். இது குளத்தில் உள்ள மீன்களை கூட சாப்பிடாது. பெரும்பாலும் இரவு முழுவதும் கரையிலேயே கிடக்கும் இந்த முதலை காலையில் பூசாரி கோயிலை திறக்கும் சத்தம் கேட்டவுடன் குளத்திற்குள் சென்று விடும்.

babiya crocodile died

இந்த நிலையில் இந்த பபியா முதலை நேற்று அதிகாலையில் குளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக கோயில் பூசாரிகள் சேர்ந்து முதலையின் உடலை வெளியே எடுத்து கோயில் நடை முன் வைத்தனர். தகவல் அறிந்ததும் காசர்கோடு எம்.பி ராஜமோகன் உண்ணித்தான, எம்எல்ஏக்கள் அஷ்ரப், என்.ஏ.நெல்லிக்குன்னு, பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் உள்பட ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று அதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோயில் வளாகத்திற்குள்ளேயே முதலை அடக்கம் செய்யப்பட்டது. நேற்று மதியம் வரை கோயிலில் எந்த பூஜைகளும் நடத்தப்படவில்லை. ஒரு முதலைக்காக இறுதி சடங்கு நடத்தப்படுவதும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதும் இதுவே முதல் முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here