மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஓளிப்பரப்ப மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியீட்டுள்ளது.
மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஓளிப்பரப்பவும், சேவை விநியோகம் செய்யவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே உள்ள ஓளிப்பரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிப்பு. இந்த அறிவிப்பால் தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி சேனல்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு.
மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் நாடு முழுவதும் ஆல் இந்தியா ரேடியோ வானொலி சேவையை வழங்கி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் இந்த வானொலி சேவைகள் அந்தந்த மாநில மொழிகளில் செயல்பட்டு வருகின்றன. தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சென்னை, தர்மபுரி, நாகர்கோவில், காரைக்கால் ஆகிய இடங்களில் வானொலி சேவை செயல்பட்டு வருகின்றது.

சமீபத்தில், காரைக்கால் வானொலி நிலையத்தின் எஃப்.எம்.-இல் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.-52 முதல் இரவு 11.20 மணி வரை 17.28 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்தன.
இந்த நிலையில் முன்னறிவிப்பின்றி, ஓருநாள் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டது. காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையிலும், இரவில் 9 மணி முதல் 10 மணி வரையிலும் மும்பை விவிதபாரதி நிலையத்தின் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் காரைக்கால் வானொலியில் தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பப்பட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் விளக்கமளித்தனர். ஆனால் மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் வலுத்தன.
கடும் எதிர்ப்பு காரணமாக காரைக்கால் வானொலி பண்பலை சேவையில் 4 மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்தி நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக பிரசார் பாரதி அறிவித்து உள்ளது. தற்போது, மாநில அரசுகள் சார்பில் தொலைகாட்சி ஓளிப்பரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.