பெங்களூர்: சுடச்சுட உணவு பதார்த்தங்களை வழங்கும் ஏடிஎம் அறிமுகம்

0
6

பெங்களூர்: பரப்பரப்பாக இயங்கும் நகரங்களில் ஓன்று பெங்களூர். “இந்தியாவின் தோட்டா நகரம்” என்று அழைக்கப்படும் நகரமாகவும் இருக்கினறது. இந்த நகரத்தில் தற்போது அனைவராலும் பேசப்படக் கூடிய விஷயம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல உணவினை ஏடிம்மில் பெறும் வசதியை பெங்களூர் மக்களின் தேவைக்காக அறிமுகம் செய்துள்ளனர்.

பெங்களூர் நகரத்தின் பலம் பன்முகத் தன்மை கொண்ட மக்கள் கூடி இருப்பது தான் என்றால் அது மிகையாகாது.  அங்கு பல மாநிலத்தவர்களும் வர்த்தக ரீதியாக சென்று வளர்ந்து வருகின்றனர். பல முன்னணி ஐடி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றது.

இந்த நகரத்தில் மக்களின் தேவைகளை புரிந்து பல புதிய நவீன திட்டங்களை அரசாங்கமும் அங்கு வர்ததகம் செய்யும் வர்த்தகர்களும் ஏற்படுத்துவர். அந்த வகையில் இப்போது அங்கு தானியங்கி மூலம் உருவாகும் இட்லி, தோசை, சட்னி என பல உணவு வகைகளை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் ATM இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர்: சுடச்சுட உணவு பதார்த்தங்களை வழங்கும் ஏடிஎம் அறிமுகம்

இந்த இயந்திரத்தை FRESH HOT ROBOTICS என்ற ஸ்டாரடப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயந்திரம் மூலம் இட்லி, தோசை, சட்னி ஆகியவற்றை சூற்றச்சூழலுக்கு ஏற்ற முறையில் பேக் செய்து தருகின்றது.  இந்த இயந்திரம் முழுவதுமாக ஆட்டோமேடிக் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் மூலம் மக்கள் நேரடி அனுபவத்தை வழங்குகிறது. மேலும், நாள் முழுவதும் சுடச்சுட உணவு பதார்த்தங்களை வழங்குகின்றது. இந்த இயந்திரம் பெங்களூர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முதற்கட்டமாக இரண்டு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் எண்ணற்ற இடங்களில் இந்த ATM உணவு இயந்திரம் அமைக்கப்படும்.

இந்த இயந்திரத்தை ஏற்படுத்திய நிறுவனம் தென் இந்திய உணவுகளை மட்டுமே தர முடிவு செய்துள்ளது. நகரின் மக்கள் அதிகம் கூடும் இடங்களான் ரயில் நிலையஙக்ள,  பேருந்து நிலையங்கள் மிக முக்கிய இடங்களில் விரைவில் அமைக்கப்படுகின்றன. மேலும், பழச்சாறுகள், அரிசி உணவு வகைகள் என பல உணவு பதார்த்தங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பரபரப்பு மிகுந்த நகரங்களில் தானியங்கி உணவு இயந்திரம் ஏற்படுத்துவது பாராட்டுக்குறியது மற்றும் வரவேற்புக் குரியதாக மக்கள் பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here