30 ஆண்டுகளுக்குப் பிறகு பணவீக்கத்தை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் வட்டி உயர்வு

0
5

இங்கிலாந்து: கொரோனா பாதிப்பு, உக்ரைன்-ரஷ்யா போர் போன்ற காரணங்களால் உலகளவில் பொருளாதாரம் பாதித்துள்ளது. பெரிய பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவையும் இதில் இருந்து தப்பவில்லை. உலக நாடுகள் அனைத்தும் பணவீக்க பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதை கட்டுக்குள் கொண்டு வர இந்நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இங்கிலாந்தில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் இந்நாட்டு மக்களின் தினசரி செலவுகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் நெருக்கடி போன்றவை பணவீக்க சதவீதத்தை மீண்டும் இரட்டை இலக்கிற்கு உயர்த்தி உள்ளது.

bank of england announces biggest hike in 30 years

பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்படுவதால், கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக பேங்க் ஆப் இங்கிலாந்து, வட்டி விகிதத்தை 2.25 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கடைசியாக கடந்த 1992ம் ஆண்டு இந்நாட்டில் வங்கி வட்டி உயர்த்தபட்டது. அமெரிக்காவிலும் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பண வீக்கம் அதிகரித்துள்ளது. இதை கட்டுபடுத்த ஏற்கனவே வட்டியை உயர்த்தியுள்ள இந்நாட்டு மத்திய வங்கி நேற்றும் 0.75 சதவீதம் வட்டியை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக 3.75 சதவீதமாக இருந்த வட்டியின் அளவு 4 சதவீதத்தை நெருங்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here