தோனி சர்வதேச இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி இவர் மூன்று விதமான கோப்பையை இந்திய அணிக்கு பெற்று தந்துள்ளார். தற்போது, இந்திய அணி பலவித இன்னல்களை சந்தித்து வரும் இவ்வேலையில் மீண்டும் தோனியை டி20 போட்டிகளில் களமிறக்க முடிவு செய்யதுள்ளது பிசிசிஐ.
முன்னாள் இந்திய அணியின் கேப்படன் பொறுப்பில் அதிக வெற்றிகளை குவித்துள்ளது. மேலும், ஓருநாள் உலக கோப்பை தொடர், டி20 உலக கோப்பை தொடர், இன்னோரு தொடருக்கான கோப்பைகளை வாங்கி தந்து இந்திய அணிக்கு சிறப்பான பெயரை தந்துள்ளார்.
தற்போது, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள தோனி சிஎஸ்கே அணிக்கு கேப்படனாக இருந்து வழிநடத்தி வருகின்றார். இந்த ஐபிஎல் தொடரே இறுதி தொடராக இருக்கும் என கருதப்படுகிறது. அதற்குபின் ஐபிஎல்லிருக்கும் ஓய்வு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனை கருத்தில் கொண்டு பிசிசிஐ நிரந்தர பதவியை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல். அதாவது மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிடே தலைமை பயிற்சியாளராக இருப்பதால் பணிச்சுமை அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்: IPL: சிஎஸ்கே அணியின் மாஸ்டர் பிளான் முழு விபரம்
டி20 போட்டிகளில் இருந்து மட்டும் அவருக்கு பதிலாக மகேந்திரசிங் தோனியை பயிற்சியாளராக நியமிக்கலாம் என பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து டி20 கோப்பைகளில் இந்திய அணி பல ஏமாற்றங்களையும் தோல்வியையும் தழுவி இவ்வேலையில் தோனியின் தலைமையில் ஏற்படுத்தப்படும் அணியை கொண்டு அடுத்த 2024ம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பைக்கு அணியை தயார்ப்படுத்தலாம் என திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2021 டி20 உலகக் கோப்பையின் போது தோனி அணியுடன் பணியாற்றி இருந்தார். ஆனாலும் அது இடைக்கால பணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.