ஜடேஜாவை இனி வரும் போட்டிகளிலிருந்து நீக்கி அதிரடி பிசிசிஐ. இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஆற்றல் மிக்க ஓருவர் ரவீந்தீர ஜடேஜா எதிர்கால போட்டிகளிலிருந்து அவரை நீக்கி பிசிசிஐ அதிரடி செய்துள்ளது.
இந்திய அணியில் சிறப்பான ஆல்ரவுன்டராக செயல்பட்டவர் ஜடேஜா அவர் ஆசிய கோப்பை போட்டிகளில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவ சிகிச்சைக்காக ஓய்வில் இருந்து வந்தார். இதனால் டி20 உலக கோப்பை தொடரில் கூட அவர் இடம் பெறவில்லை. அதனால் இந்திய அணி சிறப்பான ஆல்ரவுண்டர் இல்லாமல் தடுமாறியது அந்த உலக கோப்பை தொடரிலும் அரையிறுதி வரை சென்ற இந்திய அணியால் இறுதி போட்டிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்பியது.
தற்போது, நடைபெற்று வரும் நியூசிலாந்து பயணத்திலும் அவர் இடம் பெறாமல் ஏமாற்றபட்டார். இந்நிலையில், நியூசிலாந்து பயணம் சென்றுள்ள இந்திய அணியின் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான அணி டி20 போட்டியில் பங்கு பெற்று 1-0 என்ற இலக்கில் வெற்றியை பதிவு செய்தது.

முதல் ஓருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி நல்ல ஸ்கோரை பதிவு செய்தது இருப்பினும் அதை சேஸ் செய்து முதல் ஓருநாள் போட்டியை வென்றது நியூசி.
இந்நிலையில், அடுத்து வரும் பங்களாதேஷ் அணியுடனான போட்டிகளிலும் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா இல்லாததது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜா தரப்பில் இருந்து அவர் இன்னும் உடல்நலம் தேர வேண்டும் என்றும் அவருக்கு இன்னும் சில தினங்கள் ஓய்வு வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இதையும் படியுங்கள்: சென்னை மாநகர பேருந்துகளை அலங்கரிக்க வரும் புதிய வசதி
அதன்படி, ஜடேஜாவை இனி வரும் போட்டிகளிலிருந்து நீக்கி உள்ளது பிசிசிஐ ஜடேஜாவோ நல்ல உடல் ஆரோகியத்துடன் உள்ளார் அவரது மனைவி தேர்தலில் போட்டியிடுவதால் அவரின் வெற்றிக்காக பிரச்சாரத்திற்கு சென்று வருகிறார். இதன் காரணமாக போட்டிகளில் இருந்து ஓய்வு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டராக இருந்து வந்தவர் ரவீந்தர் ஜடேஜா நல்ல பவுலிங், நல்ல பேட்டிங், நல்ல பீல்டர் என்ற பன்முக தன்மை உடையவர் இந்திய அணிக்காக பலமுறை நல்ல தறமையை வெளிப்படுத்தியவர்.
இது போன்ற பல தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.