சரும மென்மைக்கு நச்சுன்னு 10 டிப்ஸ்

0
6

குளிர் காலத்தில் நிலவும் பனியால் முகம் மற்றும் உடலில் வறட்சி மற்றும் சுருக்கங்கள் காணப்படும். உடல் முழுவதும் மென்மையாக இருக்காது. வறண்டு காணப்படும். இவற்றை தடுக்க மற்றும் உடல் பளபளக்க நச்சுன்னு 10 டிப்ஸ்.

1. பாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு இவற்றை சேர்த்து அரைத்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.

2. எலுமிச்சைப் பழச்சாறு, பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி ஊற வைத்த பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

3. பாசிப்பருப்பை தேங்காய்பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.

4. கொத்தமல்லி மற்றும் மஞ்சளை பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும்.

5. ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.

6. பூந்திக்காெட்டையை தண்ணீரில் ஊறவைத்து அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.

7.பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.

8. சர்க்கரையுடம் சிறிது கிளிசரின் சேர்த்து தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.

9. தாமரை, ரோஜா ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்.

10. முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம்பழச் சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சுருக்கங்கள் குறையும்.

beautiful tips for soft skin and body

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here