ஐபிஎல் போட்டிக்காக நடைபெற்று வரும் மினி ஏலத்தில் பல முன்னணி வீரர்களுக்கு எதிர்பார்த்தை விட அதிக அளவில் போட்டி நிலவி வந்தது. சிஎஸ்கேவிற்கு பக்கபலமாக இருந்து வந்த ப்ராவோ மற்றும் ராபின் ஊத்தப்பா போன்ற முக்கிய வீரர்களை இழந்து உள்ள நிலையில் நல்ல திறமையான வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதுவரை விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே இந்திய அணியின் கூல் கேப்டன் தோனியே கேப்டனாக இருந்து 4 முறை ஐபிஎல் தொடரை வென்று தந்துள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் ஆல்ரவுன்டர் ரவீந்திர ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தினார்.
அதில் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை தழுவியதால் பல விமர்சனத்திற்கு உள்ளாகியது. அதனால் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகளுக்கும் ஜடேஜாவிற்கும் இடையே அசோகரியமான சூழல் நிலவியது. பின்னர், தோனி புகுந்து சமாதானம் செய்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை அணி சார்பாக இங்கிலாந்து அணியின் சாம் கர்ரனை வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிக விலைக்கு எகிறியதால் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுன்டரான பென் ஸ்டோக்ஸை 16 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கியுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் சிறந்த பீல்டர், பேட்டர், பவுலர் என்பது அனைவரும் அறிந்ததே. அடுத்ததாக, நியூசிலாந்தின் வேக பந்து வீச்சாளரான கெயில் ஜெமிசனை 1.5 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. கடந்த ஐபிஎல்லில் ஆர்சிபி இவரை 15 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கெயில் ஜெமிசன் நல்ல உயரமான வீரர் மற்றும் லோ ஆர்டரில் நல்ல பந்து வீச்சையும் நல்ல பேட்டிங்கையும் இவரிடம் எதிர்பார்க்கலாம். இந்த காரணத்தாலேயே சிஎஸ்கே நிர்வாகம் இந்த இருவரையும் வாங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: ipl auction 2023: சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற ரஹானே
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.