நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ பயன்களை காணலாம்.
- முட்டைக்கோஸ் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் மலச் சிக்கல் பிரச்சினை வராது.
- முட்டைக்கோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ,சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சினைகளான புற்றுநோய் மற்றும் இதயநோய் போன்றவற்றை தடுக்கும்.
- முட்டைக்கோஸில் பீட்டா-கரோட்டின் அதிக அளவில் இருப்பதால் அது கண்புரையை தடுக்க உதவுகிறது.
- அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால் அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும் குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
- முட்டைக்கோஸில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிரப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். மேலும் நோய் எதிரப்பு சக்தியை அதிகரிக்கும்.
- முட்டைக்கோஸை சமைக்கும் போது அதனை அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக் கூடாது. இல்லாவிட்டால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே இதனை எப்போது சாப்பிட்டாலும் அளவாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது.