சிகப்பு கவுணி அதாவது சிகப்பு அரிசி தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று. சோழர் காலம் முதல் இன்று வரை பயன்பாட்டில் இருக்கும் ஒரு நெல் வகையாகும். வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி வளரக்கூடிய நெல் வகை இது. குறைந்த முதலீட்டில் அதிக அளவு லாபம் தரக்கூடியது. இதில் அதிக அளவில் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் மற்ற அரிசிகளை விட இது மிகவும் சிறந்ததாக காணப்படுகிறது.
சிகப்பு அரிசியின் பயன்கள்
அந்த காலத்தில் சிகப்பு அரிசியை அதிகம் உட்கொண்டதால் இதய நோய், நீரிழிவு நோய் போன்றவை குறைந்தே காணப்பட்டது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக உள்ள ‘அந்தோசயனின்’ என்னும் மூலக்கூறு சிகப்பு அரிசி்க்கு அந்நிறத்தை அளிக்கிறது.
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிகப்பு அரிசியை உட்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்களுக்கு சிகப்பு அரிசி உகந்த ஒன்று. இதில் இருக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரையச் செய்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
சிகப்பு அரிசி புற்று நோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடக்கூடிய தன்மையுடையது.
சிகப்பு அரிசியை சாதம் மட்டுமின்றி புட்டு, கொழுக்கட்டை, அடை, தோசை, பாயாசம் போன்ற இனிப்பு வகைகளாக செய்து அன்றாட வாழ்வில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.