குளிர் காலங்களில் வெந்நீர் குடிப்பதன் நன்மைகள்

0
3

குளிர் காலங்களில் நம் உடல் கதகதப்பை நாடும் அந்த அளவு வானிலையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கும். இது போன்ற காலங்களில் சூடான உணவு பண்டங்களையே மனம் நாடும் அது போல நாம் அன்றாடம் குடிக்கும் நீரின் அளவில் மாற்றம் செய்யாமல் வெந்நீரை ஆர வைத்து அந்த தண்ணீரை பருகுவதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும்.

மாலை 5 மணி ஆகும் போதே குளிர் தொடங்கி விடுகிறது. இப்படி இருக்கையில் வெளியில் சென்று வரும் அனைவரும் காதுகளில் பஞ்சு அல்லது காதுகளை அடைக்கும் உறைகளை பயன்படுத்துவது அவசியமாகிறது. எங்கு செல்லும் போதும் ஓரு சிறிய பாட்டிலில் மிதமான வெந்நீரை எடுத்து சென்று பருகுவது உடல் நலத்தை பேண வழிவகுக்கும்.

இது போன்ற குளிர் காலங்களில் வெந்நீர் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

குளிர் காலங்களில் வெந்நீர் குடிப்பதன் நன்மைகள்

வெந்நீர் பருகுவதன் நன்மைகள்:

  • குளிர் காலங்களில் மிதமான வெந்நீரை பருகுது நல்லது. அதில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்து வந்தால் வைட்டமின் சி சத்து கிடைக்கக் கூடும்.
  • மிதமான வெந்நிரை நாள் முழுக்க பருகுவதன் மூலம் உடல் பருமன் குறைந்து சராசரியான உடலினை பெற வழி வகுக்கும்.
  • செறிமானக் கோலாறு பிரச்சனைகளுக்கு மிதமான குடிநீர் அருந்துவதன் மூலம் அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.
  • தொண்டையில் குளிர் காலங்களில் ஏற்படும் எரிச்சல், கரகரப்பு, புண் போன்றவற்றை வரமால் பாதுகாக்கிறது. மேலும், தீமை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கொன்று விடுகிறது.
  • தினமும் மிதமான சூடுத் தண்ணீரை பருகி வருபவர்களுக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் செயல்பாடுகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
  • உடலில் இருக்கும் நீர்சத்து மன அழுத்தத்தை குறைப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.
  • குளிர்ந்த வெப்பநிலையின் போது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பவர்களுக்கு உடல் வெப்பநிலையை சராசரி அளவுக்கு பராமரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • குளிர் காலங்களில் ஏற்படும் உடலில் ஏற்படும் நடுக்கம் குறைந்து புத்துணர்வு ஏற்படுகிறது.
  • சளி, காய்ச்சல், தொண்டை பிரச்சனைகள், தலைவலி, இருமல் போன்றவற்றிற்கு மிகுந்த நிவாரணமாக மிதமான சுடுநீர் விளங்குகிறது.

குளிர் காலங்களில் தானாகவே உடலில் தண்ணீர் அருந்துவது குறைந்து காணப்படும் அதனால் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிமையாக உடலை வைரஸ் பற்றிக் கொள்ளும் இது போன்ற காலங்களிலும் தண்ணீர் பருகுவதின் அளவை குறைக்காமல் ஓரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் மிதமான சுடுத் தண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியமாக செயல்பட உறுதுணையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: புதினா இலையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here