கார்த்திகை தீப திருநாளில் வீட்டில் 27 விளக்குகள் வைப்பதன் பலன்களை இந்த பதிவின் மூலம் அறியலாம்.
இந்துக்கள் அனைவரது வீட்டிலும் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஓன்று இந்த கார்த்திகை தீபத்திருநாளுமாகும். பஞ்சபூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தீபத்திருநாள் இன்று டிசம்பர் 6ம் தேதி தமிழ் மாதப்படி கார்த்திகை 20ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4.00 மணிக்கு அண்ணாமலையார் கருவறையில் ஐந்து மடக்குகளை கொண்டு நெய் தீபம் ஏற்றப்பட்டு உண்ணாமலை அம்மன் மற்றும் பிற சன்னதிகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து மாலை அண்ணாமலையாக காட்சி தரும் 2668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படும். இதனை கண்டவுடன் அனைவரது வீட்டிலும் விளக்குகளை ஏற்றுவர்.
அந்த வகையில் 27 விளக்குகளை ஏற்றுவது சிறப்பு வீட்டின் அருகால் பகுதியில் இரண்டு விளக்குகள், வீட்டின் பின்புறம் இரண்டு விளக்குகள், வீட்டின் தண்ணீர் பைப்புகள் உள்ள இடத்தில் இரண்டு விளக்குகள், வீட்டின் மாடப்பகுதிகளில் இரண்டு விளக்குகள், சமையலறைப் பகுதிகளில் நான்கு விளக்குகள், மாடிப்படிகள் உள்ள இடத்தில் நான்கு விளக்குகள் இது போன்ற இதரப் பகுதிகளில் மொத்தம் 27 விளக்குகளை வைப்பதால் வீட்டின் அனைத்துவித செல்வ செழிப்புகளும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
சரி அது என்ன 27 விளக்குகள் எனக் கேட்டுகும் சந்தேகத்திற்கு நம் நட்சத்திரங்கள் மொத்தம் 27 அதனை கணக்கிட்டே பண்டைய காலம் தொட்டே 27 விளக்குகள் என கணக்கிட்டு உள்ளனர் நம் முன்னோர்கள். இந்த 27 விளக்குகளை ஏற்றுவதன் மூலம் நட்சத்திர குறைபாடுகள் இருந்தாலும் தீர்ந்து நல்ல ஆரோகியமான நிலைமையை வீட்டில் உள்ளவர்க்கும் வீட்டிற்கும் நன்மை வந்து சேரும் என்பது நம்பிக்கை.
இதையும் படியுங்கள்: திருவண்ணாமலை: அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது
மிகவும பாதுகாப்பான தீப ஓளித்திருநாளை கொண்டாடவும் ஏனெனில் தீபம் ஏற்றும் இடங்களில் உள்ள இடர்பாடுகளை கவனித்து தீபத்தை ஏற்றி பாதுகாப்புடன் இருக்கவும்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.