தீய கொலஸ்ட்ராலை எரிக்கும் சக்தி வாய்ந்த பழமாக அன்னாசி விளங்குகறது. மேலும், எண்ணற்ற மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள தேன் போன்ற சுவையை உடைய அன்னாசி பழத்தின் நன்மைகள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பழங்களில் அன்னாசி பழமும் ஓன்று ஏனெனில் அதன் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை வாசனை அனைவரையும் அழைத்து உண்ணச் சொல்லும். இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடல் பருமனை குறைக்கவும் டயட்டை மேற்கொள்ளவும் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தவும் இப்பழம் சிறந்த நிவாரசணியாக உள்ளது.

அன்னாசிப் பழத்தில் உள்ள சத்துக்கள்:
அன்னாசிப் பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் காணப்படுகிறது.
அன்னாசிப் பழத்தின் நன்மைகள்:
- பற்களின் ஈறுகளில் ஏற்பட்டுள்ள வீக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அன்னாசிப் பழம் சிறந்த மருந்தாக இருக்கின்றது. மேலும், பற்கள் வலுப்பெறவும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
- அன்னாசியில் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் எலும்புகள் வலுப் பெறவும் உதவுகிறது.
- மலச்சிக்கல் போக்கி வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாக அனைந்து மனதை நிம்மதியாக வைக்கிறது.
- உடலில் உருவாகும் கொழுப்பை தடுக்கவும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரிக்கவும் அன்னாசி உதவுகிறது.
- அன்னாசிப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை நம் உடல் நோய்களை சிறப்பாக எதிர்த்துப் போராட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
- அன்னாசிப் பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மையை அளிக்கிறது.
- பொட்டாசியம் அதிக அளவிலும், சோடியம் குறைந்த அளவிலும் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதையும் படியுங்கள்: குழந்தை வரம் அருளும் பூசணி விதை எண்ணற்ற நன்மைகளை உடையது
இப்படி ஏராளமான நன்மைகளை அள்ளி தரும் தள்ளுவண்டியில் அன்றாடம் கிடைக்கும் அன்னாசிப் பழத்தை அனைவரும் விரும்பி உண்டு நம் உடலின் ஆரோக்கியத்தை பாதுக்க விழிப்புணர்வு மிக முக்கியமானதாக இருக்கின்றது.
இது போன்ற தகவல்களை அறிய தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.