கரும்புச்சாறு: உடல் வெப்பத்தை குறைக்கக் கூடிய கரும்புச்சாறில் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளும் நிறைந்துள்ளன. கரும்புச்சாறில் உள்ள சில நன்மைகளை பற்றி காண்போம்.
உடலில் உள்ள அதிகப்படியான வெப்பநிலைையை குறைத்து உடலை சமநிலையில் வைக்க உதவும். கோடைக்காலங்களில் நிலவும் வெப்பத்தின் காரணமாக உடல் சூடு அதிகமாகும். மேலும் உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறையும். இதைத் தடுக்க தினம் ஒரு டம்ளர் கரும்புச்சாறு குடிப்பது சிறந்தது.
கரும்புச்சாறில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் போன்ற பல அமினோ அமில சக்திகள் உள்ளது.
கரும்பில் இயற்கையாகவே உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக் கூடிய சுக்ரோஸ் உள்ளது. அதிக உஷ்ணத்தால் உடலில் ஏற்படும் சோர்வு, உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறை போன்றவற்றிற்கு கரும்புச்சாறு உடனடி தீர்வாகும்.
கரும்புச்சாறு கல்லீரலை வலுவாக்குவதால் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்புச்சாறை அருந்தி வந்தால் விரைவில் குணமாகலாம். கரும்புச்சாறில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் கல்லீரலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
கரும்புச்சாறு ஒரு டையூரிடிக் திரவம் என்பதால் அதைக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லதாகும். இது சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றை தடுத்து சிறுநீரகம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. சிறுநீரக கற்கள், வீக்கம், சோர்வு போன்றவற்றை நீக்க உதவுகிறது.
கரும்புச்சாறில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் பற்களின் வலிமைக்கு உகந்ததாகும். இவை பற்களின் பற்சிப்பிக்கு வலுவூட்டுவதால் பற்களில் புழுக்கள் வராமல் தடுக்கும். பற்களில் ஏற்படும் துவார பிரச்சினைகளையும் சரிசெய்யும். இது வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது.
கரும்புச்சாறு வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யும். இதில் மலமிளக்கிப் பண்புகள் இருப்பதால் மலச்சிக்கலை சரிசெய்ய பெரிதும் உதவும்.
செயற்கையாக தயாரிக்கும் குளிர்பானங்களை விட இது மாதிரி இயற்கையாக கிடைக்கும் குளிர்பானத்தினால் நம் உடலுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது. உடல் ஆரோக்கியமும் மேம்படும்.