பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு: பாரதியார் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக தன் பெயரான சுப்புரத்தினம் என்ற பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டவர் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ் மீது தீராத அன்பு கொண்டவர். பாரதியாரின் தமிழ் பற்று விடுதலை வேட்கை மற்றும் கவித்திறனால் கவரப்பபட்டவர்.
பாரதியும் பாரதிதாசனும் தோன்றி தமிழையும் சுதந்திர விடுதலையையும் தன் கவிதைகள் மூலம் நிறைவாக வழங்கியவர்கள். புரட்சிக்கவி என்று பெரும்பாலும் அறியப்படும் இவர் தமிழுக்குத் தொண்டாற்றிய கவிஞர் என்றால் அது மிகையாகாது. இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல அரசியல்வாதி திரைக்கதாசிரியர் எழுத்தாளர் ஆவார். இப்பதிவில் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை அறிவோம்.
இதையும் கவனியுங்கள்: மகாகவி சுப்பரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு,
இதையும் கவனியுங்கள்: மகாகவி பாரதியார் கவிதைகள்

பாரதிதாசன் வாழ்க்கை குறிப்பு:
இயற்பெயர்: சுப்புரத்தினம்
பெற்றோர்: கனகசபை, லட்சுமி அம்மாள்
புனைப்பெயர்: பாரதிதாசன்
பிறந்த வருடம்: ஏப்ரல் 29, 1891
பிறந்த ஊர்: புதுச்சேரி
மனைவி: பழனியம்மாள்
பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
இறப்பு: ஏப்ரல் 21, 1964
நாட்டுரிமை: இந்தியன்
பாரதிதாசன் பிறப்பு:
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
ஆரம்ப கால வாழ்க்கையும் கல்வியும்:
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார்.
அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார்.
பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார்.
மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
இல்லற வாழ்க்கை:
பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
விடுதலைப் போரட்டமும் சிறையும்:
பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார்.
சட்டமன்ற உறுப்பினராக:
இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததார்கள்.
அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிதாசனுக்கு வழங்கும் சிறப்பு பெயர்கள்:
புரட்சிக்கவி(அறிஞர் அண்ணா)
புரட்சிக்கவிஞர் (பெரியார்)
பாவேந்தர்
புதுவைக்குயில்
பகுத்தறிவு கவிஞர்
தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
இயற்க்கை கவிஞர்
பாரதிதாசன் இயற்றிய நூல்கள்:
இசை அமுது
பாண்டியன் பரிசு
எதிர்பாராத முத்தம்
சேரதாண்டவம்
அழகின் சிரிப்பு
புரட்சிக்கவி
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
குறிஞ்சித்திட்டு
கண்ணகி புரட்சிக்காப்பியம்
மணிமேகலை வெண்பா
காதல் நினைவுகள்
கழைக்கூத்தியின் காதல்
தமிழச்சியின் கத்தி
இளைஞர் இலக்கியம்
சுப்பிரமணியர் துதியமுது
சுதந்திரம்
தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது)
பாரதிதாசன் எழுதிய நாடகங்கள்:
சௌமியன்
நல்ல தீர்ப்பு
பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
சக்திமுற்றப் புலவர்
அமைதி ஊமை (தங்கக் கிளி பரிசு)
இரணியன் அல்லது இணையற்ற வீரன்
சௌமியன்
படித்த பெண்கள்
இன்பக்கடல்
நல்லதீர்ப்பு
அம்மைச்சி
ரஸ்புடின்
அமைதி
பாரதிதாசன் எழுதிய உரைநடை நூல்கள்:
திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
பாரதிதாசன் நடத்திய இதழ்கள்:
குயில்
முல்லை (முதலில் தொடங்கிய இதழ்)
பாரதிதாசன் எழுதிய பாடல்கள் சில:
”நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோலம் முழுவதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்உலகம் சாமோ?”
”எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
இடம்நோக்கி நகர்கிறது இந்தவையம்
கல்லாரைக் காணுங்கால் கல்விநல்காக்
கசடர்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்”
”தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
”தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே”
”எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”
”நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்”
இது போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.
விருதுகளும் அங்கிகாரங்களும்:
- 1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
- 1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.
- 2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல் தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
- அறிஞர் அண்ணா, “புரட்சிக்கவிˮ என்ற பட்டமும் பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்ˮ என்ற பட்டமும், வழங்கினர்.
- தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு “பாரதிதாசன் விருதினைˮ வழங்கி வருகிறது.
- ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். பாரதிக்குப் பின் தலைசிறந்த கவிஞராக தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் பாவேந்தர் பாரதிதாசன் என்றால் அதுமிகையாகாது.
இது போன்ற பல தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.