பாரதிராஜா: இயக்குனர் பாரதிராஜா தமிழில் இயக்காத நடிகர், நடிகைகள் இல்லை என்ற அளவிற்கு அந்த காலத்தில் அவர் மிகவும் பிரபலமான இயக்குனர் ஆவார். அவர் எப்போதும் யதார்த்தமான கிராமத்து கதைகளை சிறந்த திரைக்கதையுடன் தருவதில் வல்லவர். தமிழில் பல முன்னணி ஹீரோயின்கள் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்தான். இவரது மண் சார்ந்த கதைகள் மற்றும் திரைப்படங்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். பல வருடங்களாக இயக்குனராக இருந்தவர் தற்போது சில படங்களில் நடிகராகவும் தன்னை நிரூபித்து வருகிறார். இளம் நடிகர்களாக சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு போன்றவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் தனுஷ் நடித்த முதல் படம ‘சார்’. தமிழில் இது ‘வாத்தி’ என்ற பெயரில் வெளியானது. இதற்கு முன்பு ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷின் தாத்தாவாக அவருடன் இணைந்து நடித்திருந்த பாரதிராஜா ‘வாத்தி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இரண்டு காட்சிகளில் மட்டும் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில்,
‘என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல் கற்களை தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்து நின்றிருக்கிறேன். அப்படியொரு பயணத்தின் போது நான் ஸ்தம்பித்து நின்ற இடம் ‘வாத்தி’. எத்தனையோ படங்கள் பார்க்கிறேன். அதில் இப்படம் எனக்கு ஸ்பெஷல். அதனால்தான் சிறப்புத் தோற்றத்தில் இரண்டு காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்று அவர் கூறியுள்ளார்.